For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இன்று என்ன நாள் தெரியுமா?.. ஏன் கூகுள் இப்படி ஒரு டூடுள் போட்டுச்சு தெரியுமா??

Google Oneindia Tamil News

சென்னை: கூகுளின் இன்றைய டூடுள் பலரையும் கவர்ந்துள்ளது. காரணம், அதற்கும் நமக்கும் இடையே ஒரு "ரத்த சம்பந்தம்" உள்ளது என்பதால். ஆம், ரத்தக் குழுக்களை பகுத்து தனித் தனியாக பிரித்த விஞ்ஞானி கார்ல் லேன்ட்ஸ்டெய்னரின் 148வது பிறந்த நாள் இன்று.

அவரது பிறந்த நாளைத்தான் இன்று வித்தியாசமான டூடுள் போட்டு கொண்டாடுகிறது கூகுள். இந்த டூடுளை கிளிக் செய்தால் அதில் மனித ரத்த குழுக்களின் விவரத்தை அறியலாம்.

New Google Doodle Honors Karl Landsteiner, Discoverer of Blood Groups

1868ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி பிறந்தவர் கார்ல். இவர் ஆஸ்திரியாவில் பிறந்து அமெரிக்காவில் செட்டிலான இயற்பியலாளர் மற்றும் உயிரியியலாளர்.

மனித ரத்த வகுப்புகளை 1900ம் ஆண்டில் பிரித்து அறிவித்து உலகின் கவனத்தை ஈர்த்தவர் கார்ல். மேலும் நவீன ரத்த பகுப்பு வகைப்பாட்டியலை உருவாக்கியவரும் கூட.

ரத்தத்தில் உள்ள அக்ளுட்டினின் (agglutinin) தான் ரத்தத்தின் வகையை முடிவு செய்வதாகும். அதன் இருப்பைக் கண்டறிந்தவர் கார்ல். அவருடன் சேர்ந்து ஆர்எச் எனப்படும் ரீசஸ் காரணியைக் கண்டறிந்தவர் அலெக்சாண்டர் வியனர்.

இப்படிப்பட்ட பெருமைக்குரிய கார்ல் பிறந்த நாள் இன்று.

English summary
Karl Landsteiner, the subject of Tuesday's Google Doodle, may not be a household name, but his work helps save millions of lives every day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X