For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மேகாலயா ஆளுநரான தஞ்சாவூர் ஆர்.எஸ்.எஸ் இயக்க பிரமுகர் சண்முகநாதன்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: மேகாலயா ஆளுநராக தமிழகத்தை சேர்ந்த சண்முகநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் இருந்து ஆளுநராக படிப்படியாக உயர்ந்துள்ள சண்முகநாதன் பயோடேட்டா இதோ.

 New Governor of Meghalaya hails from Tamilnadu
  • தஞ்சை மாவட்டத்தில் பிறந்த சண்முகநாதன், அரசியல் அறிவியலில் எம்.ஏ, எம்.பில் பட்டம் பெற்றுள்ளார்.
  • எம்.ஏ. அரசியல் அறிவியலில் தங்கப்பதக்கம் பெற்றுள்ளார். இவர் சிறந்த எழுத்தாளர்.
  • தி ரிமார்க்கபிள் பொலிடிக்கல் மூவ்மென்ட், கார்யகர்த்தா நிர்மான்' ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
  • 1962ம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் இணைந்தார். 20 ஆண்டுகாலம் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்த வந்துள்ளார்.
  • சுவாமி விவேகானந்தரின் கருத்துக்களை இளைஞர்களிடையே பரப்பினார். மாணிக்கவாசகரின் திருவாசகத்தையும் இளைஞர்களிடையே பரவச் செய்தார்.
  • இளைஞர்களிடையே ஆர்.எஸ்.எஸ் கருத்துக்களை விதைக்க தமிழ் வளர்ச்சி மன்றம், தமிழ் பக்தர் பேரவை ஆகிய மன்றங்களை நிறுவினார்.
  • தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் இளைஞர்களை இணைத்தார்.
  • திருமணம் செய்து கொள்ளாமல் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் ஆர்.எஸ்.எஸ். முழுநேர ஊழியராக 40 ஆண்டுகள் இருந்தவர்.
  • கடந்த 2004ம் ஆண்டு பாஜக தலைமையகத்திற்கு மாற்றப்பட்ட அவர், நாடாளுமன்ற பாஜக அலுவலக இணைச் செயலாளராக பணியாற்றி வந்தார்.
  • பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராக உள்ள அவர் மேகாலயா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
English summary
Shri Shanmuganathan, who hails from Thanjavur in Tamilnadu will be the new Governor of Meghalaya. He is a gold medalist, post-graduate and an M Phil in Political Science.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X