For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹோண்டா ஹார்னெட் 160ஆர் பைக்கை பிரபலப்படுத்த புது ரூட்டில் இளசுகளை வளைத்த ரகசியம்!

By Chakra
Google Oneindia Tamil News

சமீபத்தில் விற்பனைக்கு வந்த ஹோண்டா ஹார்னெட் 160ஆர் பைக்கை புதிய ரூட்டை பிடித்து, வாடிக்கையாளர்களை வளைத்திருக்கிறது ஹோண்டா நிறுவனம். ஆம், அந்த பைக்கிற்காக பிரத்யேகமாக வெளியிடப்பட்ட ஆன்ட்ராய்டு மொபைல்போன் அப்ளிகேஷன் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. ஷோரூமிற்கு சென்று நேரத்தை செலவழிக்காமல், இந்த பைக் பற்றி ஏ டு இசட் தகவல்களை பெறும் வசதியை இந்த அப்ளிகேஷன் வழங்குகிறது.

இதுவரை 35,000க்கும் அதிகமானோர் இந்த அப்ளிகேஷனை தரவிறக்கம் செய்துள்ளதாக ஹோண்டா அனுப்பியிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஹோண்டா ஹார்னெட் 160ஆர் பைக்கின் மீது இருக்கும் ஆர்வம் காரணமாக இந்த அப்ளிகேஷன் பெருத்த வரவேற்பை பெற்றிருக்கிறது தெளிவாகிறது. இந்த அப்ளிகேஷன் மூலமாக வாடிக்கையாளர்கள் பெறக்கூடிய தகவல்கள் மற்றும் இதர சிறப்புகளை ஸ்லைடரில் விளக்கமாக தெரிந்து கொள்ளலாம்.

கூகுள் ப்ளே ஸ்டோரில்...

கூகுள் ப்ளே ஸ்டோரில்...

கூகுள் ப்ளே ஸ்டோரில் ஹோண்டா ஹார்னெட் 160ஆர் என்று டைப் செய்து, இந்த அப்ளிகேஷனை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அப்ளிகேஷனில் வசதிகள்

அப்ளிகேஷனில் வசதிகள்

ஹோண்டா ஹார்னெட் 160ஆர் பைக்கின் சிறப்பம்சங்கள், இதே ரகத்திலான பிற பைக்குகளுடன் ஒப்பீடுகள், 360 டிகிரி கோணத்தில் படங்களை காணும் வசதி, மைலேஜ் விபரம், டீலர்கள் விபரம் மற்றும் ஆன்ரோடு விலை என ஒட்டுமொத்த விபரங்களையும் மிக எளிதாக உங்கள் மொபைல்போனிலேயே தெரிந்து கொள்ளலாம்.

புது அனுபவம்

புது அனுபவம்

இந்த அப்ளிகேஷன் மூலமாக ஹோண்டா ஹார்னெட் 160ஆர் பைக்கின் எஞ்சினின் பவர் உள்ளிட்ட தொழில்நுட்பத் தகவல்கள் மட்டுமின்றி, எஞ்சின் இயக்கம் பற்றியும் பார்க்க முடிவதும் புதிய அனுபவத்தை தருகிறது. இதற்காக திரையில் தோன்றும் விசேஷ பொத்தான்களை பயன்டுத்தி, பைக் எஞ்சின் துவக்க நிலையிலிருந்து அதிவேகத்தில் செல்லும்போது எவ்வாறு இருக்கும் என்பதை தத்ரூபமாக தெரிந்து கொள்ள முடிகிறது. அவ்வளவு ஏன், பைக்கின் ஹாரன் சப்தம் எவ்வாறு இருக்கும் என்பதை கூட கேட்க முடியும்.

உட்கார்ந்த இடத்தில் முடிவு...

உட்கார்ந்த இடத்தில் முடிவு...

இந்த அப்ளிகேஷனை வைத்து இந்த பைக்கின் ஒட்டுமொத்த தகவல்களையும் சீர் தூக்கி பார்த்து, உட்கார்ந்த இடத்திலிருந்து ஒரு சில நிமிடங்களில் வாங்குவது குறித்து முடிவு எடுத்துவிடலாம். அப்புறம் என்ன?

 முன்பதிவுதான்...

முன்பதிவுதான்...

ஹோண்டா ஹார்னெட் 160ஆர் பைக்கை வாங்குவதற்கு முடிவு எடுத்ததற்கு பின்னர், முன்பதிவு செய்ய டீலருக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. இந்த அப்ளிகேஷன் மூலமாகவே Book Now என்ற ஆப்ஷனை தேர்வு செய்தால், அதில் உங்களது விபரத்தை அளித்து ரூ.5,000 செலுத்தி முன்பதிவு செய்து விடலாம்.

ஆர்வம் பிறந்துவிட்டதா?

ஆர்வம் பிறந்துவிட்டதா?

ஹோண்டா ஹார்னெட் 160ஆர் பைக்கிற்கான ஆன்ட்ராய்டு அப்ளிகேஷனை டவுன்லோடு செய்ய ஆர்வம் பிறந்துவிட்டதா? உடனே, உங்களது ஆன்ட்ராய்டு இயங்கு தளம் கொண்ட ஸ்மார்ட்போனில் கூகுள் ப்ளே ஸ்டோருக்கு சென்று தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

53 நகரங்களில் கிடைக்கும்...

53 நகரங்களில் கிடைக்கும்...

புதிய ஹோண்டா ஹார்னெட் 160ஆர் பைக்கிற்கான ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் தற்போது நாடு முழுவதும் 53 நகரங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. முன்னர், 21 நகரங்களில் மட்டுமே இந்த அப்ளிகேஷன் கிடைத்தது நினைவிருக்கலாம்.

ஹோண்டா ஹார்னெட் 160ஆர் சிறப்பம்சங்கள்

ஹோண்டா ஹார்னெட் 160ஆர் சிறப்பம்சங்கள்

ஹோண்டா ஹார்னெட் 160ஆர் பைக் நேக்கட் ரகத்தை சேர்ந்தது. மிரட்டலான தோற்றம், 5 ஸ்போக் அலாய் வீல்கள், இரண்டு சக்கரங்களுக்கும் ஒருங்கிணைந்த ஹோண்டாவின் காம்பி பிரேக்கிங் சிஸ்டம், 140மிமீ அகலம் கொண்ட பின்புற டயர், நீளமான வீல்பேஸ் ஆகியவை இந்த பைக்கிற்கு சிறப்பு சேர்க்கும் அம்சங்கள். குறிப்பாக, ஹோண்டா பைக்குகள் என்றாலே அதன் எஞ்சினுக்கு முக்கியத்துவம் தருவோம் அல்லவா?

எஞ்சின்

எஞ்சின்

ஹோண்டா ஹார்னெட் 160ஆர் பைக்கில் 15.6 பிஎச்பி பவரையும, 14.76 என்எம் டார்க்கையும் அதிகபட்சமாக வெளிப்படுத்தக்கூடிய 162.7சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டது.

வண்ணங்கள்

வண்ணங்கள்

ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் பைக், நியோ ஆரஞ்ஜ் மெட்டாலிக், பியர்ல் அமேஸிங் வைட், ஸ்போர்ட்ஸ் ரெட், பியர்ல் ஸைரன் ப்ளூ மற்றும் பியர்ல் நைட்ஸ்டார் பிளாக் உள்ளிட்ட 5 நிறங்களில் கிடைக்கின்றது.

 வேரியண்ட்டுகள், விலை விபரம்

வேரியண்ட்டுகள், விலை விபரம்

ஹோண்டா ஹார்னெட் 160ஆர் பைக் இரண்டு வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. சாதாரண மாடல் ரூ.79,990 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும், காம்பி பிரேக்கிங் சிஸ்டம் கொண்ட மாடல் ரூ.84,400 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கிறது.

English summary
The new Honda CB Hornet 160R features sharp and muscular styling details. In a bid to capture its target audience of young professionals and students hooked to social media, Honda has launched an exclusive ‘CB Hornet 160R’ android mobile application. Encouraged by the overwhelming response of nearly 35,000 downloads, Honda has advanced its plan to increase availability of bookings via the app by more than two-fold. It will now reach 53 cities across India, up from the initial 21.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X