For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய நீதிபதிகள் 7 பேர் இன்று தலைமை நீதிபதி முன்னிலையில் பதவியேற்பு

சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய நீதிபதிகள் 7 பேர் இன்று தலைமை நீதிபதி முன்னிலையில் பதவியேற்றனர்.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

சென்னை : சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 7 நீதிபதிகளும் தலைமை நீதிபதி இந்திரா பானார்ஜி முன்னிலையில் பதவியேற்றனர்.

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 7 புதிய நீதிபதிகள் நியமிக்கபட்டுள்ளனர். தற்போது தமிழகத்தின் பல்வேறு நீதி மன்றங்களில் வேலை பார்த்த நீதிபதிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

New Judges for Chennai HC sworn in Today

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 7 புதிய நீதிபதிகளை நியமிக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளதை அடுத்து அவர்கள் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான ஒப்புதல் கடிதம் இரண்டு நாட்களுக்கு முன்னதாக அளிக்கப்பட்டது.

புதிய நீதிபதிகளான நிர்மல் குமார், ஆஷா, சுப்பிரமணிய பிரசாத் , ஆனந்த் வெங்கடேஷ்,சரவணன், இளந்திரையன், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் இன்று பதவியேற்றனர். இவர்களுக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் எண்ணிக்கை 56ல் இருந்து 63 ஆக அதிகரித்துள்ளது. இன்னமும் 12 இடங்கள் காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
New Judges for Chennai HC sworn in Today. All 7 judges sworn in infront of Chennai HC Chief Justice Indira Banerjee .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X