For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அந்தமானுக்கு கிழக்கே மீண்டும் காற்றழுத்தம்: புயலாக மாறும்- வானிலை எச்சரிக்கை

அந்தமானுக்கு கிழக்கே மீண்டும் காற்றழுத்தம் ஏற்பட்டுள்ளது. இது புயலாக மாறி தமிழகத்தில் கரையை கடக்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: கடந்த வாரம் தென்கிழக்கு வங்கக் கடலில் தெற்கு அந்தமான் மற்றும் வடக்கு சுமத்ரா தீவுக்கு இடையே வளி மண்டல மேலடுக்கில் உருவான காற்று சுழற்சி வர்தா புயலாக மாறி, சென்னையில் கரையை கடந்தது. இதன் மூலம் சென்னை சுற்றுவட்டாரப்பகுதிகளில் குறிப்பிடத்தகுந்த அளவிற்கு மழை பெய்தது. குடிநீர் ஏரிகளின் நீர் இருப்பும் அதிகரித்தது.

வடகிழக்குப் பருவமழை கடந்த அக்டோபர் 30ம் தேதிதான் தொடங்கியது. பருவமழை தாமதமாகத் தொடங்கியிருப்பதால் இந்த ஆண்டு மழை தாமதமாகத்தான் முடியும். எனவே வர்தா புயலோடு மழை முடிவுக்கு வந்து விடாது. இன்னும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலையோ அல்லது புயலோ வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

New low depression formed near Andaman – Met office

வர்தா புயலின் தாக்கத்தால் வளி மண்டல மேலடுக்கில் காற்று சுழற்சி ஏற்பட்டு தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் சென்னையில் மழை பெய்யாவிட்டாலும் அதிகபட்சமாக குன்னூரில் நேற்று 10 செமீ மழை பெய்துள்ளது. நீலகிரி 7 செ.மீ, தாராபுரம் 5 செ.மீ பீளமேடு, போளூர், கோவை 1 செ.மீ மழை பெய்துள்ளது.

இந்நிலையில், வளி மண்டல மேலடுக்கு காற்று சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்றும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அந்தமானுக்கு கிழக்கே மீண்டும் ஒரு காற்றழுத்தம் நேற்று மாலை உருவாகியுள்ளது. இது வடக்கு மற்றும் வட மேற்கு திசையில் நகர்ந்து அடுத்த நான்கு நாட்களில் தமிழக கடலோரப்பகுதிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காற்றழுத்தம் வலுப்பெற்று புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

English summary
The Met department sources said, there is a new low depression formed near Andaman.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X