For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நெல்லை புதிய எஸ்பியாக விக்ரமன் பொறுப்பேற்பு : காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை

Google Oneindia Tamil News

திருநெல்வேலி: நெல்லைக்கு புதிதாக எஸ்பி விக்ரமன் இன்று பொறுப்பேற்றார். அவருக்கு காவல்துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து நடந்த ஜாதிய மோதல்களால் பலர் கொலை செய்யப்பட்டனர். கடந்த ஜூன் மாதம் முதல் 10 மாத காலத்தில் 97 கொலைகள் நடந்துள்ளன.

New SP takes charge in Tirunelveli

தொடர் கொலைகளை அடுத்து நெல்லை சரக டிஐஜி சுமித்சரண், நெல்லை எஸ்பி நரேந்திரன் நாயர் ஆகியோர் ஒரே நேரத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

இவர்களுக்கு பதிலாக நெல்லை புதிய டிஐஜியாக விழுப்புரம் டிஐஜி முருகன், நெல்லை புதிய எஸ்பியாக விழுப்புரம் எஸ்பி விக்ரமன், ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நெல்லை போலீஸ் கமிஷனர் கூடுதல் பொறுப்பு டிஐஜி முருகனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று காலை 10 மணிக்கு நெல்லை புதிய எஸ்பி விக்கிரமன் பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு காவல்துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

நெல்லைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட எஸ்பி விக்ரமன் இன்று பொறுப்பேற்றார்.இன்று பொறுப்பேற்ற கையேடு உடனடியாக மாவட்ட முக்கிய காவல்துறை அதிகாரிகளோடு குற்ற சம்பவங்கள், பாதுகாப்பு, ரோந்துப் பணி உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனை கூட்டத்தை நடத்துவார் என்று கூறப்படுகிறது.

English summary
S.P.Vikraman has take charge a Superintendent of Police of Tirunelveli City.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X