For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தாலி கட்டிய கையோடு மரம் நட்ட தம்பதியினர்

Google Oneindia Tamil News

வள்ளியூர்: நெல்லை மாவட்டத்தில் தாலி கட்டி முடித்த கையோடு மரம் நட்டு பசுமை கரங்களில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர் ஒரு வித்தியாசமான தம்பதிகள்.

நெல்லை மாவட்டம் வள்ளியூரை சார்ந்தவர் மாரியப்பன். வெளிநாட்டில் வேலைபுரியும் இவர் கண்ணனல்லூரை சேர்ந்தவர். தனது திருமண நாளில் வள்ளியூர் பசுமைகரங்களில் உறுப்பினராக தன்னை இணைந்துகொண்டு ஐந்து மரக்கன்றுகளை நடவேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.

Newly married couple plant a tree in Nellai…

இன்றுகாலை மாரியப்பன் -காயத்திரி ஆகியோர் திருமணம்.இதனைத் தொடர்ந்து உற்சாகமடைந்த பசுமைக்கரங்கள் உறுப்பினர்கள் அனைவரும் இன்று அதிகாலையே சுறுசுறுப்பாக செயல்பட்டனர்.

முதல்கட்டமாக மாரியப்பன் -காயத்திரி தம்பதியினர் கோவிலில் தாலிகட்டியவுடன் கிருஷ்ண கல்யாணமண்டபம் அருகில் இரு மரக்கன்றுகளை நட்டுவிட்டு மணமக்கள் திருமண வரவேற்பிற்க்காக திருமண மண்டபத்திற்குள் சென்றனர்.

Newly married couple plant a tree in Nellai…

இவர்களின் இம்முயற்சி அனைவரின் பாராட்டையும் பெற்றதுள்ளது.இதுக் குறித்து மாரியப்பன் தம்பதியினர் கூறும்போது,எனக்கு இந்துப் போன்ற நல்ல செயல்களை செய்ய சின்ன வயது முதலே இலட்சியம் என்றார்.

இவர்களைப்போல் தன்னார்வம் மிக்க இளைஞர்கள் நூறுபேர் இணைந்தாலே போதும் வள்ளியூர் வெகுவிரைவில் பசுமைநகரமாக ஆகிவிடும் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.திருமணக் கோலத்தில் தாலிக் கட்டி முடிந்த கையோடு புதுமணத் தம்பதிகள் மரம் நட்டது அப்பகுதியில் வரவேற்பை பெற்றுள்ளது.

English summary
Valliyur newly married couple plant a tree after marriage. It is popularly spread over the people.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X