For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேனிலவு பயணத்தில் விபரீதம்.. பாய்ந்து முட்டிய காட்டெருமை.. பெண் பலி.. கணவர் தப்பினார்

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் காட்டெருமை தாக்கியதில் தேனிலவுக்கு வந்து புதுமணப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது கணவர் தப்பினார்.

Google Oneindia Tamil News

ஊட்டி: குன்னூருக்கு தேனிலவுப் பயணம் மேற்கொண்ட இளம் தம்பதிக்கு பெரும் சோகம் நேர்ந்தது. காட்டெருமை ஒன்று பாய்ந்து வந்து முட்டியதில் மனைவி பரிபாதமாக உயிரிழந்தார். கணவர் சிறிய காயத்துடன் உயிர் தப்பினார்.

சென்னையைச் சேர்ந்தவர் தினேஷ். இவருக்கும் தாமரை என்பவருக்கும் இடையே சமீபத்தில் திருமணமானது. திருமணத்தைத் தொடர்ந்து தேனிலவுக்கு ஊட்டி வந்தனர். பல்வேறு இடங்களையும் சுற்றிப் பார்த்த அவர்கள் குன்னூருக்கு வந்தபோது அவர்களுக்கு விதி காட்டெருமை ரூபத்தில் துரத்தி வந்தது.

Newly wed woman dies of bison attack in Coonoor

குன்னூரில் உள்ள புகழ் பெற்ற சிம்ஸ் பூங்காவில் மனைவியுடன் இயற்கையை ரசித்துக் கொண்டிருந்தார் தினேஷ். அப்போது எங்கிருந்தோ வந்த காட்டெருமை இளம் ஜோடி மீது பாய்ந்தது. இதைப் பார்த்து அலறி அடித்து இருவரும் தப்பி ஓடினர். ஆனால் தாமரையை துரத்திய காட்டெருமை அவரை முட்டித் தூக்கி வீசியது. இதில் அவருக்கு வயிறு கிழிந்து குடல் சரிந்தது. கல்லீரல் துண்டிக்கப்பட்டது.

தினேஷும் காயமடைந்து கீழே விழுந்தார். அங்கிருந்தவர்கள் காட்டெருமையை விரட்டி விட்டு விட்டு தினேஷையும், அவரது மனைவியையும் குன்னூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் இருவரும் கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று தாமரை உயிரிழந்தார். தினேஷ் பிழைத்துக் கொண்டார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முக்கிய சுற்றுலாத்தலமான குன்னூருக்கு ஆயிரக்கணக்கானோர் வருகின்றனர். குறிப்பாக தேனிலவுத் தம்பதியினர் அதிகம் வருகின்றனர். குழந்தைகள் அதிகம் வருகின்றனர். இப்படிப்பட்ட இடத்தில் இதுபோன்ற பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டிருப்பதை பலரையும் அதிர வைத்துள்ளது.

English summary
A newly wed woman died of bison attack in Coonoor while he was visiting the Sims park with her hubsband. The husband escaped with injuries.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X