For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அடுத்த முதல்வர் ரவீந்திரநாத் குமார்: தேனி கூட்டத்தில் போட்டுத் தாக்கிய மதுரை ஆதீனம்

|

தேனி: தேர்தல் பிரச்சாரத்தில் வாக்காளர்களிடம் வாக்கு கேட்பதற்கு பதில் அடுத்த முதல்வர் ரவீந்திரநாத் குமார் தான் மதுரை ஆதீனம் ஆருடம் கூறிய சம்பவம் அதிமுகவினர் மத்தியில் கடும் அதிர்சியை ஏற்படுத்தியது.

தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் பார்த்திபனை ஆதரித்து சின்னமனூரில் அதிமுக சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்தின் சிறப்பு அழைப்பாளர் ஆன்மீக புயல் மதுரை ஆதீனம் தான்.

Next CM is minister O.Panneerselvam's son: Madurai Adheenam

பொதுக் கூட்டத்தில் அடிப்பொடிகள் எல்லாம் பேசிய பிறகு, மைக் பிடித்தார் மதுரை ஆதீனம்.

மகா ஜனங்களே, வணக்கம். சன்னிதானமே உங்களை சந்திக்க வந்திருக்கேன். நாடு நலம் பெற அம்மாவை பிரதமர் ஆக்க வேண்டும். அதிமுகவை 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வைக்க வேண்டும். அம்மா உங்களையும், கடவுளையும் நம்பி தான் தேர்தல் களத்தில் நிற்கின்றார் என்று டச்சிங்காக பேசினார்.

ஆனால் திடீரென அம்மா நன்றாக இருந்தால் தான் நாடு நல்லா இருக்கும். ஓ.பி.எஸ். நல்லா இருந்தால் தான் அவர் மகன் ரவீந்திரநாத் குமார் நன்றாக இருப்பார். நாளை அம்மா பிரதமர் ஆனால் ஓ.பி.எஸ். தான் முதல்வர், அடுத்த அவர் மகன் ரவீந்திரநாத் குமார் தான் முதல்வர் என அரசியல் அணுகுண்டை போட்டார்.

மேடையில் இருந்த ஓ.பி.எஸ். ஆதரவாளர்களும், அதிமுக நிர்வாகிகளும், யானை தன் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்ளும் என்பார்களே அது இது தானா என ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் குமாரை பார்த்து ஜாடையில் கேட்க அவரும் பத்தவைச்சீட்டீயே பரட்டே என்பதற்கு பதில் பத்தவைச்சீட்டீங்களே ஆதீனம் என தலையில் அடித்துக் கொண்டார்.

இனி தேனி பக்கம் மதுரை ஆதீனம் புரோகிராம் கேன்சல், அது போல், மதுரை போகமலே சென்னை போக வழி இருந்தால் கண்டுபிடித்து சொல்லுங்க என ரவீந்திரநாத் குமார் அழுவாத குறையாக சொல்கின்றாராம்.

English summary
Madurai Adheenam told in a meeting that minister O. Panneerselvam's son will be chief minister one day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X