For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சங்கராமன் கொலை வழக்கில் தீர்ப்பு- நெருங்குது நவ. 27...நடுங்குது காஞ்சி சங்கரமடம்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: காஞ்சி சங்கராச்சாரியார்கள் மீதான கொலை வழக்கில் வரும் 27-ந் தேதி தீர்ப்பு வழங்கப்படுவதால் சங்கர மடம் பதற்றத்தில் ஆழ்ந்திருக்கிறது.

காஞ்சி சங்கரமடத்துக்கும் தீபாவாளி மாதமான ஐப்பசிக்கும் அப்படி ஒரு பொருத்தம். 2004 ஆம் ஆண்டு தீபாவளி நாளில்தான் காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் சங்கராச்சாரி ஜெயேந்திரர் கைதானார்.

இப்போது அதே தீபாவளி மாதமான ஐப்பசியில்தான் சங்கரராமன் கொலை வழக்கில் தீர்ப்பு தேதி நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. வரும் 27-ந் தேதியன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுகிறது.

ஆதி சங்கரரால் நிறுவப்பட்ட மடங்களில் காஞ்சி சங்கர மடம் இடம்பெறவில்லை. அதாவது ஹிந்து அமைப்புகள் அங்கீகரிக்கிற அதிகாரப்பூர்வ சங்கர மடம் இது இல்லை. இவர்களாகவே உருவாக்கிக் கொண்ட ஒரு மடம்.

சங்கரராமன் - ஜெயேந்திரர்

சங்கரராமன் - ஜெயேந்திரர்

இந்த சங்கர மடத்தில் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமியின் வளர்ப்பு மகனாக இருந்தவர் சங்கரராமன். அவருக்கு அடுத்து இருந்தவர் ஜெயேந்திரர்.

சங்கரட மோதல் யார் வசம்?

சங்கரட மோதல் யார் வசம்?

இதனால் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிக்குப் பின்னர் சங்கர மடம் யாருக்கு என்பதில் இருவருக்கும் மோதலில் இருந்தது. இதில் ஜெயேந்திரர் வென்றார்.

விடாத சங்கரராமன்

விடாத சங்கரராமன்

ஆனால் ஜெயேந்திரரின் பல்வேறு முறைகேடுகளை தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்தார் சங்கரராமன். இதனால் சங்கரராமன் மீது செம கடுப்பில் இருந்தார் ஜெயேந்திரர்

படுகொலை

படுகொலை

இந்நிலையில்தான் 2004-ம் ஆண்டு வரதராஜ பெருமாள் கோயில் அலுவலகத்திலேயே சங்கரராமன் படு கொலை செய்யப்பட்டார்.

தொடக்கத்தில் போலி குற்றவாளிகள்

தொடக்கத்தில் போலி குற்றவாளிகள்

இந்த படுகொலையில் தொடக்கத்தில் சிலர் சரணடைந்தனர். ஆனால் அவர்கள் திடீரென தாங்கள் போலி குற்றவாளிகள் என்று சொல்ல வழக்கு சூடுபிடித்தது.

செம டீம்

செம டீம்

இதைத் தொடர்ந்து களமிறங்கியதுதான் டேவிட்சன் தேவ ஆசிர்வாதம், பிரேம்குமார், சக்திவேல் ஆகியோர் அடங்கிய டீம்.

சிக்கிய சங்கராச்சாரியார்கள்

சிக்கிய சங்கராச்சாரியார்கள்

இந்த டீமின் விசாரணையின் முடிவில் 2004ஆம் ஆண்டு தீபாவாளி நாளில் ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து விஜயேந்திரர் உட்பட 25 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

புதுவைக்கு மாற்றம்

புதுவைக்கு மாற்றம்

ஜெயேந்திரர் தரப்பினர் கோரிக்கையை ஏற்று இந்த வழக்கு தமிழகத்தில் இருந்து புதுவைக்கு மாற்றப்பட்டது.

82 பேர் பிறழ் சாட்சிகள்

82 பேர் பிறழ் சாட்சிகள்

இந்த வழக்கு தொடங்கிய உத்திரமேரூர் நீதிமன்றம், செங்கல்பட்டு செஷன்ஸ் நீதிமன்றங்களில் ஜெயேந்திரருக்கு எதிராக சாட்சி சொன்ன 187 பேரில் 82 பேர் நாங்கள் போலீஸ் பயமுறுத்தியதால் ஜெயேந்திரருக்கு எதிராக சாட்சி சொன்னோம் என புதுவை நீதிமன்றத்தில் சொன்னார்கள்.

அப்ரூவர் ரவிசுப்பிரமணி பல்டி

அப்ரூவர் ரவிசுப்பிரமணி பல்டி

ரவுடிகளுக்கும் ஜெயேந்திரருக்கும் உள்ள தொடர்புகளை பற்றி சொன்ன அப்ரூவர் ரவிசுப்ரமணியனும் பல்டி சாட்சியானார்.

சங்கரராமன் குடும்பமும் படி

சங்கரராமன் குடும்பமும் படி

கொலையாளிகளை நேரில் பார்த்ததாக சொன்னவர்களில் சங்கரராமனின் மனைவி பத்மாவும் மகள் உமாவும் மகன் கணேஷும் அடக்கம். அவர்களும் கூட தங்களுக்கு எதுவும் தெரியாது என பிறழ் சாட்சியாகி விட்டனர்.

சர்ச்சைக்குரிய நீதிபதி

சர்ச்சைக்குரிய நீதிபதி

புதுவையில் இந்த வழக்கை விசாரித்த நீதியரசர் ராமசாமி பற்றியும் சர்ச்சை எழுந்தது. தற்போது நீதிபதி முருகன் விசாரணை நடத்தி வருகிறார். இவர்தான் நாடே எதிர்பார்க்கும் தீர்ப்பை வரும் 27-ந் தேதி வழங்க இருக்கிறார். இதனால் காஞ்சி சங்கர மடம் நடுங்கிக் கிடக்கிறது.

English summary
Puducherry court will deliver judgement in the Sankararaman murder case, in which Kanchi Sankaracharya Jayendra Saraswathi and his junior Vijayendra are the prime accused, next week.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X