For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கு : கோவையில் 5 இடங்களில் என் ஐ ஏ சோதனை

இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்குத் தொடர்பாக கோவையில் 5 இடங்களில் என் ஐ ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

கோவை: கோவையில் இந்து முன்னணிப் பிரமுகர் சசிக்குமார் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 5 பேரின் வீடுகளில் தேசிய புலனாய்வு ஏஜென்ஸியான என் ஐ ஏ சோதனை நடத்தி வருகிறது.

கோவையில் இந்து முன்னணி அமைப்பின் செய்தித் தொடர்பாளராக இருந்து சசிக்குமார் என்பவர் கடந்த 2016ம் ஆண்டு வெட்டி படுகொலை செய்யப்படார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

NIA officials in Search of 5 places at Coimbatore

இந்த வழக்கை விசாரித்த சிபிசிஐடி, கோவையைச் சேர்ந்த சதாம், அபுதாஹிர், முபாரக் மற்றும் சுபேர் ஆகிய 4 பேரை கைது செய்தது. இந்த வழக்கை தேசிய புலனாய்வு ஏஜென்ஸியான என் ஐ ஏ தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றது.

இதில், என் ஐ ஏ அதிகாரிகள் பலகட்ட விசாரணை நடத்திய நிலையில், இன்று காலை 4.30 மணி முதல் கோவையில் அரஸ், அஜீஸ், விபின் ரகுமான், முகமது அலி மற்றும் சதாம் உசேன் ஆகிய 5 பேரின் வீடுகளில் சோதனை நடத்தி வருகின்றனர். 30க்கும் மேற்பட்ட அதிகாரிகள் 5 குழுக்களாகப் பிரிந்து இந்த சோதனையை நடத்தி வருகிறார்கள்.

NIA officials in Search of 5 places at Coimbatore

இதில், வீடுகளில் உள்ள கணிணிகள், மடிக்கணிணிகள், செல்போன்கள் உள்ளிட்டவற்றை தொடர்ந்து அவர்கள் ஆராய்ந்து வருகிறார்கள். சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுவிடாமல் தடுக்க காவல்துறை உதவியுடன் சோதனை நடந்து வருகிறது.

முன்னதாக, இந்த வழக்கில் தன்னை என் ஐ ஏ அதிகாரிகள் சிக்கவைக்கப் பார்ப்பதாக விபின் ரகுமான் கடந்த வாரம் கோவை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
NIA officials in Search of 5 places at Coimbatore. Hindu Front Leader Sasikumar Murdered on 2016 and the case was investigated by NIA officials and they went on Search in 5 places.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X