For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருவள்ளூர்: டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த 7 நாட்கள் நிலவேம்பு கசாயம் வழங்கிய ரஜினி ரசிகர்கள்!

By Shankar
Google Oneindia Tamil News

திருவள்ளூர்: தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் திருவள்ளூர் மாவட்டம் முக்கியமானதாகும். அங்கு சுமார் 200 பேர் டெங்குவால் மரணமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் அரசுத் தரப்பில் இந்தக் கணக்கு காட்டப்படவே இல்லை.

திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மீஞ்சூர், பொன்னேரி, ரெட் ஹில்ஸ், மதுரவாயல், அம்பத்தூர் பகுதிகளில் ரஜினி ரசிகர்கள் நிலவேம்பு கசாயம் வழங்கினார்கள்.

Nilavembu water for Dengue by Rajini fans

தொடர்ந்து ஏழு நாட்கள் இது வழங்கப்பட்டது , தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் என மொத்தம் 8 ஆயிரம் பேர்கள் பயனடைந்தார்கள். நில வேம்பு பற்றி, பக்க விளைவுகள் ஏற்படும் என்று சிலர் கூறினாலும், அத்தகைய ஆராய்ச்சி முடிவுகள் ஏதும் இல்லை என்று கூறப்படுகிறது.

Nilavembu water for Dengue by Rajini fans

அரசு சார்பிலும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நிலவேம்பு கசாயம் அறிவுறுத்தப் பட்டுள்ள நிலையில், பொது மக்கள் நலன் கருதி ரஜினி ரசிகர்கள் இத்தகைய ஏற்பாடுகளை செய்தனர்.

Nilavembu water for Dengue by Rajini fans

நிழற்பந்தல் அமைத்தும், பஸ் ஸ்டாப்புகளிலும் நிலவேம்பு கசாயம் வினியோகம் நடைபெற்றது. தொடர்ந்து ஐந்து நாட்கள் அருந்த வேண்டும் என்ற சித்த மருத்துவர்களின் அறிவுரைப் படி, பயனாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதன் படி,பொது மக்கள் ஐந்து நாட்களும் தொடர்ந்து வந்து பருகிச் சென்றனர்.

Nilavembu water for Dengue by Rajini fans

மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரமும் மேற்கொள்ளப்பட்டது

ஏற்பாடுகளை ரஜினி முரட்டுப்பக்தர்கள் குரூப் ரஜினி வெங்கட், நீலகண்டன், மெய்யழகன் செய்திருந்தனர். மாவட்ட நிர்வாகிகள் எஸ்.சுந்தர மூர்த்தி, சி.பி.ரமேஷ்குமார்,ஆர்சி சேகர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

English summary
Rajini fans have distributed Nilavembu water to public for 7 days continuously to control Dengue
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X