For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நீலகிரியில் பனிமூட்டம் அதிகம்.. 3 நாட்களுக்கு வருவதை தவிருங்கள்.. கலெக்டர் கோரிக்கை

3 நாட்களுக்கு சுற்றுலா வருவதை தவிர்க்க வேண்டும் என நீலகிரி கலெக்டர் கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

ஊட்டி: பனிமூட்டம் அதிகமாக இருப்பதால் சுற்றுலா வருவதை பொதுமக்கள் 3 நாட்கள் தவிர்க்க வேண்டும் என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.

தமிழக மாவட்டங்களில் கடந்த 3 தினங்களாக மழை பெய்து வருகிறது. கொட்டி வரும் கனமழையால் நிறைய இடங்களில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. மேலும் மரங்கள் வேரோடு பொத் பொத்தென்று சாய்ந்து விழுகின்றன. இதனால் பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரி விடுமுறை

பள்ளி, கல்லூரி விடுமுறை

நிறைய வீடுகளில் விரிசலும் ஏற்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. கனமழை குறித்தும் மாவட்டத்தில் ஏற்பட்டு வரும் பாதிப்பு குறித்தும் "ஒன் இந்தியா தமிழ்" சார்பாக மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவிடம் கேட்கப்பட்டது.

குன்னூருக்கு பாதிப்பு

குன்னூருக்கு பாதிப்பு

அப்போது பேசிய ஆட்சியர், "நீலகிரியில் வடகிழக்கு பருவ மழையின் தாக்கம் அதிகமாக இருக்கும். குன்னூர், ஊட்டி, கோத்தகிரி பகுதிகளில் அதிகமாக மழை பெய்யக்கூடும். குறிப்பாக குன்னூர் பகுதி இந்த மழையினால் அதிகமாக பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. எனவே இதற்காக அனைத்து முன்னேற்பாடுகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

விபத்து ஏற்பட வாய்ப்பு

விபத்து ஏற்பட வாய்ப்பு

ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டாலும் மழை இன்னும் குறையவில்லை. அதோடு பனிமூட்டம் அதிகமாக உள்ளதால் சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வருவதை 3 நாட்களுக்கு தவிர்க்க வேண்டும். கண்ணை மறைக்கும் பனிமூட்டம் காரணமாக வாகன விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது" இவ்வாறு ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா நம்மிடையே தெரிவித்தார்.

ஆலோசனை கூட்டம்

ஆலோசனை கூட்டம்

முன்னதாக வடகிழக்கு பருவமழையை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்த ஆலோசனை கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இதில், மாவட்டத்தின் கண்காணிப்பு அதிகாரியும், அரசின் முதன்மை செயலருமான சங்கர காந்த் பி.காம்ளே மற்றும் வருவாய்துறை, வனத்துறை, நீதித்துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

English summary
Nilgiri District Collector requested to avoid touring for 3 days
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X