For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிர்மலா தேவியின் குரல் பதிவு "சக்ஸஸ்".. சென்னையில் 3 மணி நேரம் ரெக்கார்டிங்!

சென்னை மயிலாப்பூர் தடய அறிவியல் அலுவலகத்தில் சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற நிர்மலா தேவியின் குரல் மாதிரி சோதனை நிறைவடைந்தது.

Google Oneindia Tamil News

Recommended Video

    நிர்மலா தேவியிடம் குரல் மாதிரி சோதனை- வீடியோ

    சென்னை: மயிலாப்பூர் தடய அறிவியல் அலுவலகத்தில் சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற நிர்மலா தேவியின் குரல் மாதிரி சோதனை நிறைவடைந்தது.

    கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்தார் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி. இதுதொடர்பான தொலைபேசி ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிர்மலா தேவிக்கு குரல் மாதிரி பரிசோதனை நடத்த, உயர் நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்தது.

    குரல் மாதிரி பரிசோதனை

    குரல் மாதிரி பரிசோதனை

    இதையடுத்து, நிர்மலா தேவிக்கு சென்னை மயிலாப்பூரில் உள்ள தடயவியல் ஆய்வகத்தில் இன்று குரல் மாதிரி பரிசோதனை நடத்தப்பட்டது.

    புழல் சிறையில்

    புழல் சிறையில்

    இதற்காக நிர்மலா தேவி மதுரை மத்திய சிறையில் இருந்து நேற்று காலை 9.30 மணி அளவில் போலீஸ் பாதுகாப்புடன் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். நேற்று மாலை சென்னை வந்தடைந்த அவர், புழல் பெண்கள் மத்திய சிறை அடைக்கப்பட்டார்.

    குரல் மாதிரி சோதனை நிறைவு

    குரல் மாதிரி சோதனை நிறைவு

    இந்நிலையில் பேராசிரியை நிர்மலா தேவி குரல் பரிசோதனைக்காக மயிலாப்பூரில் உள்ள தடயவியல் துறை அலுவலகத்திற்கு இன்று அழைத்து செல்லப்பட்டார். இதைத்தொடர்ந்து அவரிடம் குரல் மாதிரி சோதனை நடத்தப்பட்டது.

    சுமார் 3 மணி நேரம்

    சுமார் 3 மணி நேரம்

    சுமார் 3 மணி நேரம் இந்த சோதனை நடைபெற்றது. அப்போது அவர் மாணவிகளிடம் எவ்வாறு போனில் பேசினாரோ அதுபோன்று பல விதங்களில் பேச வைக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டதாக தெரிகிறது.

    போலீசார் முடிவு

    போலீசார் முடிவு

    இதைத்தொடர்ந்து நிர்மலா தேவியை மீண்டும் மதுரை அழைத்து சென்று நாளை சிறையில் அடைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    English summary
    Nirmala Devi's voice sample test was completed. The test completed in about 3 hours at Mylapore forensics office.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X