For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாசமா பேசுவாங்க.. நிர்மலா தேவிக்காக உருகும் ரசிகர் அன்பழகன்!

கோர்ட்டில் ஆஜரான நிர்மலாதேவியை அவரது ரசிகர் இன்றும் சந்திக்க வந்தார்

Google Oneindia Tamil News

Recommended Video

    மொட்டை அடித்து கொண்டு கோர்ட்டுக்கு வந்த நிர்மலாதேவி..வீடியோ

    ஸ்ரீவில்லிப்புத்தூர்: "நிர்மலாதேவி என்கிட்ட பாசமா பேசினாங்க" என்று பூரித்து சொல்கிறார் நிர்மலாதேவிக்காக உருகும் ரசிகர் அன்பழகன்.

    கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக தொடரப்பட்ட வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் நடந்து வருகிறது.

    இது சம்பந்தமாக நிர்மலாதேவி ஜாமீனில் வெளியே வந்தாலும், வழக்கு விசாரணைக்காக அவ்வப்போது ஸ்ரீவில்லிப்புத்தூர் கோர்ட்டில் ஆஜராகி வருகிறார்.

    இந்நிலையில் நிர்மலாதேவிக்கு ஒரு தீவிர ரசிகர் இருக்கிறார். அவர் பெயர் அன்பழகன். தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்! நாம் தமிழர் கட்சியின் உசிலம்பட்டி நகர செயலாளர் என்கிறார்கள்.

    மொட்டை அடித்து கொண்டு கோர்ட்டுக்கு வந்த நிர்மலாதேவி.. பரபரப்பை தந்த அடுத்த கெட்-அப்! மொட்டை அடித்து கொண்டு கோர்ட்டுக்கு வந்த நிர்மலாதேவி.. பரபரப்பை தந்த அடுத்த கெட்-அப்!

    விசாரணை

    விசாரணை

    எப்போதெல்லாம் இந்த வழக்கு விசாரணைக்காக நிர்மலாதேவி ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டுக்கு வருவாரோ, அப்போதெல்லாம் கோர்ட் வாசலிலேயே தவறாமல் ஆஜர் ஆகிவிடுவார் அன்பழகன். கடந்த காலங்களில் போலீஸ் ஜீப்பில் இருந்து இறங்கி, கோர்ட்டுக்குள் அழைத்துச்செல்லப்பட்டு, திரும்பவும் வேனில் ஏறி கிளம்பி செல்லும்வரை அவர் அங்கேயே நின்று நிர்மலாதேவியை பார்த்து கொண்டே இருப்பார்.

    பாசம்

    பாசம்

    அங்கிருக்கும் செய்தியாளர்களிடமும் நிர்மலாதேவி கேஸ் எந்த நிலைமையில் உள்ளது என்பது பற்றி ஆர்வமாக விசாரித்துக்கொண்டே இருப்பார். "நான் நிர்மலாதேவியின் தீவிர ரசிகர், அவர் மேல ஒரு தப்பும் இல்லை. அவர் பத்தின செய்தியெல்லாம் பார்க்கும்போது எனக்கு கண்ணீர்தான் வரும். என்னை போலவே நிறைய ரசிகர்கள் நிர்மலாதேவி மீது பரிதாபம் கொண்டுள்ளோம்" என்பார் இவர்.

    ஆஜர்

    ஆஜர்

    வழக்கம்போல, இன்றைக்கும் நிர்மலாதேவியை பார்க்க கோர்ட் வாசலில் ஆஜராகி இருந்தார் அன்பழகன். மொட்டை அடித்து கொண்டு இன்று கோர்ட்டுக்கு வந்த நிர்மலாவிடம் இவர் ஏதாவது பேசியிருப்பார் என்று தெரிகிறது.

    சகோதர பாசம்

    சகோதர பாசம்

    செய்தியாளர்களிடம் பேசும்போது, "என்கிட்ட பாசம் போல பேசினார். அது ஒரு சகோதர பாசம். பேராசிரியைக்கு 2 பொண்ணுங்க இருக்காங்க.. ஒரு புள்ளை பல் டாக்டருக்கு 3-வது வருஷம் படிக்குது. இன்னொரு புள்ளை பிளஸ் 1 படிக்குது.. ஆனா 2 பேரும் எங்க இருக்காங்கன்னே தெரியல. அவர் ஹஸ்பண்ட் கூட்டிட்டு போயிட்டாராம்" என்கிறார் அன்பழகன்.

    English summary
    Professor Nirmala Devis Fan Anbazhagan said that, "She spoke with me affectionately"
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X