For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மொழிபெயர்ப்புக்கு தனி பல்கலை கழகத்தை உருவாக்க வேண்டும்:மோடி கவிதை நூல் வெளியீட்டு விழாவில் வைரமுத்து

மொழிபெயர்ப்புக்கு தனி பல்கலைக் கழகத்தை உருவாக்க வேண்டும் என கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    மோடியை புகழ்ந்து தள்ளிய வைரமுத்து- வீடியோ

    சென்னை: மொழிபெயர்ப்புக்கு தனியாக் ஒரு பலகலைக் கழகத்தை உருவாக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியின் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் கவிஞர் வைரமுத்து கோரிக்கை விடுத்துள்ளார்.

    பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தி மொழியில் எழுதிய கவிதைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. சிந்தனை களஞ்சியம் என்ற பெயரிலான இந்த மொழிபெயர்ப்பு நூல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

    Nirmala Sitharaman releases Tamil translation of PM Modi's poems

    மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த விழாவில் பேசிய வைரமுத்து, தாய் மொழியான குஜராத்தியில் பிரதமர் மோடி கவிதைகளை எழுதியிருப்பதால் அவர் மீதான மதிப்பு கூடியுள்ளது.

    இந்த நூலில் மதத்தைவிட அரசியலைவிட மனிதாபிமானம் மேலோங்கி இருக்கிறது. மொழிகளில் தேர்ந்த சொற்கள் உருவாக மொழிபெயர்ப்புக்கு என ஒரு தனி பல்கலைக் கழகம் அமைக்கப்பட வேண்டும் என்றார்.

    இந்நிகழ்ச்சியில் பேசிய நிர்மலா சீதாராமன், கவிதைகளில் வெளிப்படுத்தும் மென்மைத்தன்மைதான் பிரதமர் மோடியின் குணம். இந்த நூலின் மூலம் பிரதமர் மோடியின் உள்ளச் சிந்தனையை உணர்ந்து கொள்ள முடியும் என பேசினார்.

    மோடியின் குஜராத்தி மொழி கவிதைகளை சமஸ்கிருத மொழி பேராசிரியர் ராஜலஷ்மி சீனிவாசன் மொழிபெயர்த்துள்ளார்.

    English summary
    Union Defence Minister Nirmala Sitharaman said that she was proud to have a leader of Prime Minister Narendra Modi's stature. She was speaking at an event after releasing Sindhanai Kalanjiyam the Tamil translation of poems written originally in Gujarati by PM Modi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X