For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நான் ஊர் சுற்றும் அமைச்சரா?.. சொன்னா சொல்லிட்டு போங்க.. எனக்கு பொழுது போகுது.. நிர்மலா சீதாராமன்

Google Oneindia Tamil News

சென்னை: நான் ஊர் ஊராக சுற்றினாலும் எனது துறை சார்ந்த பணிகளை செய்யாமல் விட்டது கிடையாது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

குடியுரிமை திருத்தச் சட்ட விளக்கக் கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்.

அவரிடம் கேட்க வேண்டிய கேள்விகளை பார்வையாளர்கள் அதற்கான அட்டைகளில் எழுதி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் சமர்ப்பித்தனர். நிகழ்ச்சி நிறைவில் பார்வையாளர்கள் கேள்விகளுக்கு நிர்மலா சீதாராமன் பதில் அளித்து கொண்டிருந்தார்.

அருமை.. பள்ளிவாசலில் இந்து ஜோடிக்கு கல்யாணம்.. மசூதியில் முழங்கிய வேதம்.. சிலிர்க்கும் மனிதம்! அருமை.. பள்ளிவாசலில் இந்து ஜோடிக்கு கல்யாணம்.. மசூதியில் முழங்கிய வேதம்.. சிலிர்க்கும் மனிதம்!

நிர்மலா

நிர்மலா

நிதி அமைச்சராக இருந்து கொண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து ஊர் ஊராக போய் விளக்கம் அளிக்கிறீர்களே. இதனால் உங்கள் வேலை பாதிக்காதா என ஒருவர் நிர்மலாவிடம் கேட்டார்.

மக்கள்

மக்கள்

இதற்கு நிர்மலா சீதாராமன் பதிலளிக்கையில், இன்னும் 10 நாட்களில் பட்ஜெட் வர இருக்கிறது. அரசின் நிர்வாகத்தை நல்ல விஷயங்களை அமைச்சர்கள், அதிகாரிகள் மக்களிடம் கொண்டு செல்வது தவறானது கிடையாது.

பொருளாதாரம்

பொருளாதாரம்

அண்மையில் பிரதமருடனான ஒரு ஆலோசனை கூட்டத்தில் என்னால் பங்கேற்க இயலவில்லை. இதனால் எனக்கு பொறுப்பு இல்லை, நான் இப்படி இருப்பதால்தான் பொருளாதாரம் சீரழிக்கிறது என சிலர் கடுமையாக விமர்சித்தனர்.

கொஞ்சம்

கொஞ்சம்

என் துறையை நான் நல்லபடியாகவே பார்த்து கொள்கிறேன். ஊர் ஊராக சுற்றினாலும் எனது பணியை நான் செய்யாமல் விட்டது கிடையாது. என் மீதான விமர்சனங்களை நான் ரசிக்கிறேன். இதனால் எனக்கு கொஞ்சம் பொழுது போகிறது என்றார் நிர்மலா சீதாராமன்.

Take a Poll

English summary
Finance Minister Nirmala Sitharaman gets angry over the question that whether her department work not affected while she is going to place to place to explain CAA.?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X