For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மதுரை ஆதின மடத்திற்குள் நித்தியானந்தா நுழைய தடையில்லை!

மதுரை ஆதீன மடத்திற்குள் நித்தியானந்தா நுழைய தடைவிதித்த உத்தரவுக்கு இடைக்காலத்தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஆதீனமடத்தில் நித்தியானந்தாவுக்கு ஆப்பு

    மதுரை: மதுரை ஆதீன மடத்திற்குள் நித்தியானந்தா நுழைய தடைவிதித்த உத்தரவுக்கு இடைக்காலத்தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

    மதுரை ஆதினமாக தன்னை தானே நித்தியானந்தா அறிவித்துக்கொண்டதற்கு எதிராக ஜெகலதபிராபன் என்பவர் சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். கைது நடவடிக்கைக்கு பயந்து மதுரை ஆதினமாக அறிவித்துக்கொண்டதை திரும்ப பெறுவதாக கோர்ட்டில் அவர் பதில்மனு தாக்கல் செய்திருந்தார்.

    Nithyanada can enter Madurai Adhinam mutt

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன், மதுரை ஆதின மடத்திற்குகோ, மடத்திற்கு சொந்தமான கோவில்களுக்கோ நுழைய மாட்டேன் என நித்தியானந்தா எழுத்துப்பூர்வ வாக்குறுதி அளித்தால் வழக்கை முடித்து வைப்பதாக கூறினார்.

    இல்லையென்றால், ஜெகலதபிராபன் தாக்கல் செய்த வழக்கு விசாரிக்கப்பட்டு அதன் தன்மைக்கேற்ப தீர்ப்பு வழங்கப்படும் என அறிவுறுத்தியிருந்தார்.

    நித்தியானந்தா சார்பில் எந்த முடிவும் எடுக்காத நிலையில், மதுரை ஆதின மடம், மடத்துக்கு சொந்தமான கோவில்களுக்குள் நுழைய நித்தியானந்தாவுக்கு தடை விதிப்பதாக நீதிபதி மகாதேவன் கடந்த மார்ச் 5ஆம் தேதி உத்தரவிட்டார்.

    தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து நித்தியானந்தாவின் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை மதுரை ஆதீன மடத்திற்குள் நித்தியானந்தா நுழைய தடைவிதித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது. மேலும் வழக்கு விசாரணையை ஜூன் 18-ம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்துள்ளது.

    English summary
    High court Madurai bench orders to intervene for the ban imposed On Nithyananda to enter in the madurai Aadhinam.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X