For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுகவும், ஜனசங்கமும் இணைந்து எமெர்ஜென்சியை எதிர்த்தன.. நிதின் கட்கரி பேச்சு

உறுப்பினர் அல்லாத ஒருவருக்காக நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது கருணாநிதிக்காவே என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நினைவஞ்சலி செலுத்தினார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    கருணாநிதி நினைவேந்தல்: சென்னையில் திரண்ட தேசிய தலைவர்கள்-வீடியோ

    சென்னை: உறுப்பினர் அல்லாத ஒருவருக்காக நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது கருணாநிதிக்காவே என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நினைவஞ்சலி செலுத்தினார்.

    மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவேந்தல் கூட்டம் சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் தேசிய தலைவர்கள் பலரும் பங்கேற்றுள்ளனர்.

    இதில் பங்கேற்றுள்ள மத்திய அமைச்சர் நிதின்கட்கரி கருணாநிதி குறித்து நினைவு கூர்ந்தார். அவர் பேசியதாவது, திமுகவும், ஜனசங்கமும்தான், காங்கிரஸ் ஆதிக்கத்தை எதிர்த்தன.

    இந்திய ஜனநாயகம்

    இந்திய ஜனநாயகம்

    எமெர்ஜென்சியை இணைந்து எதிர்த்ததும் இவ்விரு கட்சிகள்தான். தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்திய ஜனநாயகத்திற்கு கருணாநிதி பங்களித்தார்.

    நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

    நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

    கருணாநிதியை தமிழக தலைவராக மட்டும் பார்க்க வேண்டாம், அவர் தேசிய தலைவர். கருணாநிதிக்காக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

    வாஜ்பாயுடன் இணைந்து

    வாஜ்பாயுடன் இணைந்து

    இரு அவைகளிலும் உறுப்பினராக இருந்திராத கருணாநிதிக்காக அவை ஒத்திவைக்கப்பட்டது சரித்திர நிகழ்வு. நாட்டின் நலனுக்காக வாஜ்பாயுடன் இணைந்து பணியாற்றியவர் கருணாநிதி.

    வெள்ள பாதிப்பு

    வெள்ள பாதிப்பு

    எமெர்ஜென்சி காலத்தில் பாரதிய ஜனசங்கத்துடன் இணைந்து செயல்பட்டார் கருணாநிதி. 1971ம் ஆண்டு தமிழகம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது.

    நம்மை விட்டு நீங்கிவிட்டனர்

    நம்மை விட்டு நீங்கிவிட்டனர்

    திமுக எம்.பிக்கள் வெள்ள நிவாரணத்திற்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தபோது வாஜ்பாய் ஆதரவு அளித்தார். கருணாநிதி, வாஜ்பாய் ஆகிய இரு இந்திய திருமகன்கள் அடுத்தடுத்து நம்மை விட்டு நீங்கிவிட்டனர்.

    ஓய்வின்றி உழைத்தார்

    ஓய்வின்றி உழைத்தார்

    தமிழ் திரைத்துறை, இலக்கியம், பத்திரிகை துறையில் சாதனை படைத்தவர் கருணாநிதி. கருணாநிதி ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தொடர்ந்து ஓய்வின்றி உழைத்தார் என கருணாநிதி குறித்து நினைவுகூர்ந்து நினைவஞ்சலி செலுத்தினார் நிதின்கட்கரி.

    திருக்குறள்

    திருக்குறள்

    இறுதியாக "வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு"- திருக்குறளை மேற்கோள் காட்டி மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தனது உரையை நிறைவு செய்தார்.

    English summary
    Union Minister Nitin Gadkari has attend Karunanidhi. He memoraised Karunanidhi's service in political.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X