For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பரீட்சையில் தோல்வி... தற்கொலை செய்துகொண்ட ப்ளஸ் டூ மாணவி - வீடியோ

பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்ததால் தாராபுரத்தில் நிவேதா என்ற மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

By Suganthi
Google Oneindia Tamil News

தாராபுரம்: தாராபுரம் அருகில் உள்ள முத்தூரில் நிவேதா என்ற மாணவி ப்ளஸ் டூ தேர்வில் தோல்வியடைந்த காரணத்தால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார். இதனால் அப்பகுதியே சோகமயமாக உள்ளது.

நேற்று காலை பத்து மணிக்கு ப்ளஸ் டூ தேர்வு முடிகள் வெளியிடப்பட்டன. இந்த வருடம் 9.3 லட்சம் மாணவர்கள் பரீட்சை எழுதியிருந்தனர். அவர்களில் 92.1 சதவிகிதம் மாணவர்கள் தேர்ச்சியடைந்திருந்தனர்.

 Nivedha, plus 2 student committed suicide

இந்த ஆண்டு, முதலிடம், இரண்டாமிடம் என்ற ரேங்க் முறை ஒழிக்கப்பட்டுவிட்டது. இதனால் மாணாவர்களுக்கும் பெற்றோர்கள் மதிப்பெண் குறித்த மன அழுத்தம் குறைந்துள்ளது. ஆனால் தேர்வு, மதிப்பெண் குறித்த பயம் இருக்கும் மாணவர்களில் சிலர் தற்கொலை வரை செல்வது துரதிஷ்டமானது.

தாராபுரம் அருகில் உள்ள முத்தூரில் வசிப்பவர் சக்திவேல். இவருடைய மகள் நிவேதா. பனிரெண்டாம் வகுப்பு பரீட்சை எழுதியிருந்தார். நேற்று வெளியான தேர்வு முடிவுகளில் அவர் தேர்ச்சி பெறவில்லை. அதனால் மனமுடைந்த அவர் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனால் அப்பகுதியே சோகமாக உள்ளது.

தற்போது மே மாதம் தேர்வு முடிவுகள் வெளியகி அதில் தோல்வி அடைந்தால் அடுத்து ஜூலை மாதமே எழுதும் வசதி உள்ளது. அப்பரீட்சையில் எழுதி தேர்வு பெற்று அதே வருடம் கல்லூரியில் படிக்கும் தன் வகுப்பினரோடு சேர்ந்து படிக்கும் வசதி உள்ளது.

இப்படியான வாய்ப்புகள் உள்ளன என மாணவர்கள் மத்தியில் தெளிவுற கூறி அவர்களை மன உளைச்சலில் இருந்து காப்பாற்ற வேண்டியது ஆசிரியர், பெற்றோர், நண்பர்கள் என அனைவரின் கடமை.

English summary
Nivedha, plus 2 student committed suicide as she failed in +2 board exam
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X