For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஏற்கனவே பதிவான மனைகளை மறுபதிவு செய்ய தடையில்லை.. சென்னை ஹைகோர்ட் அதிரடி!

ஏற்கனவே பதிவான மனைகளை மறுபதிவு செய்ய தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: ஏற்கனவே பதிவான மனைகளை மறுபதிவு செய்ய தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அரசு நிர்ணையத்த கட்டணங்களை செலுத்தி கட்டுமானங்களை மேற்கொள்ளலாம் என ஹைகோர்ட் தெரிவித்துள்ளது.

அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளை பத்திரப்பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடையை தளர்த்தி உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. விவசாய நிலங்களை வீட்டுமனைகளாக மாற்றவும், அங்கீகாரம் அற்ற நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்படும் போது அதனை பதிவு செய்ய தடை விதிக்க கோரி வக்கீல் யானை ராஜேந்திரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.

No ban for Already registered flats to register again: Chennai high court

இந்த வழக்கில் பத்திர பதிவுக்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர், பத்திர பதிவுக்கு தளர்வு வழங்க்கப்பட்டது.

இந்நிலையில் இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சில சந்தேகங்களை எழுப்பியிருந்தது. இதற்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று விளக்கமளித்தது.

அதன்படிகடந்த 20.10.2016 க்கு முன்னர் பதிவு செய்த நிலங்களை எவ்வித நிபந்தனையுமின்றி மறுப்பத்திரப்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. மேலும் அரசு நிர்ணயித்த கட்டணத்தை செலுத்தி கட்டுமானம் துவங்கலாம் என்றும் சென்னை ஹைகோர்ட் கூறியுள்ளது.

மேலும் அரசின் புதிய விதிப்படி கட்டுமானம் செய்து கொள்ளலாம் என்றும், தடை அமலில் இருந்த போது நடந்த பதிவான மனைகளுக்கு இது பொருந்தாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் வழக்கு விசாரணை வரும் ஆக. 28 ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

English summary
No ban for Already registered flats to register again: Chennai high court
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X