For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கடந்த 15 நாட்களாக மீனவர்களின்றி கடலில் எந்த படகுகளும் இல்லை.. சொல்கிறார் நிர்மலா சீதாராமன்!

கடந்த 15 நாட்களாக மீனவர்கள் இன்றி எந்த படகுகளும் இல்லை என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: கடந்த 15 நாட்களாக மீனவர்கள் இன்றி எந்த படகுகளும் இல்லை என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

ஓகி புயலால் தென் தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டது. கடலுக்கு மீன்பிடிக்க சென்ற கன்னியாகுமரி தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மீனவர்களில் பலர் கரை திரும்பாததால் அவர்களின் குடும்பத்தினர் பெரும் கவலை அடைந்துள்ளனர்.

No boats found for last 15 days in sea withou Fishermen: Union minister Nirmala seetharaman

கன்னியாகுமரி மாவட்டம் நீரோடி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் இன்னும் கரைதிரும்பாததால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் மீனவர்களை மீட்டுத்தரக்கோரி சாலைமறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடற்படை கப்பல்கள், ஹெலிகாப்டர்கள் மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது. தமிழக அரசும் மீட்புப்பணிகளில் துரிதாமாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடலில் 15 நாட்களாக மீனவர்களின்றி எந்த படகுகளும் காணப்படவில்லை என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். கடலில் மீன்பிடிக்க சென்று காணாமல் போன தமிழக, கேரள மீனவர்கள் மீட்கப்படுவர். மீனவர்கள் உதவியுடன் ஹெலிகாப்டர்கள் மூலம் தேடும் பணி நடைபெற்று வருகிறது என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

English summary
No boats found for last 15 days in sea withou Fishermen said union minister Nirmala seetharaman. Tamil and Kerala fishermen will be rescued said Union minister Nirmala seetharaman.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X