For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அண்ணா அறிவாலயம் இப்போது எப்படி இருக்கிறது?

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    அண்ணா அறிவாலயம் இப்போது எப்படி இருக்கிறது?- வீடியோ

    சென்னை: அறிவாலயத்திற்கு திமுக தலைவர் கருணாநிதி வருகை தர முடியாததால் தொண்டர்கள் கலங்கிப்போயுள்ளனர்.

    சென்னை தேனாம்பேட்டையிலுள்ள திமுக தலைமையகம் அறிவாலயம், எப்போதும் பிஸியாக இருக்க கூடிய இடம். கருணாநிதி ஆக்டிவாக இருந்தவரை, தினமும் அறிவாலயம் வருவார். திமுக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துவது வழக்கம். அவர் ஆக்டிவாக இல்லாத போது மு.க.ஸ்டாலின் வருகையால் அறிவாலயம் எப்போதும் பிசியாக இருந்தது.

    No DMK cadres in Anna Arivalayam

    வீட்டிலேயே கருணாநிதி ஓய்வு எடுத்த காலகட்டங்களில் கூட திடீரென அவரை அறிவாலயம் அழைத்து வந்துவிட்டு தொண்டர்களை நோக்கி கையசைக்க செய்துவிட்டு அழைத்து சென்றார் ஸ்டாலின்.

    அறிவாலயம் கட்டுவதில் கருணாநிதியின் உழைப்பு பெருமடங்கு. தினமும் 14 கூட்டங்கள் வரை பேசி சேகரித்த பணத்தை வைத்து கட்டியது அது. இதனால், அவரை அறிவாலயம் அழைத்துவந்தால் உற்சாகமாவார் என்ற எண்ணம் ஸ்டாலினுக்கும் பிற நிர்வாகிகளுக்கும் இருந்தது.

    அறிவாலயம், கோபாலபுரம் இல்லம் ஆகியவற்றையே இத்தனை ஆண்டுகளாக சுற்றி வந்த திமுக தொண்டர்கள், கடந்த 11 நாட்களாக காவேரி மருத்துவமனையை சுற்றி வருகிறார்கள். இதனால் அண்ணா அறிவாலயம் வெறிச்சோடி கிடக்கிறது.

    English summary
    No DMK cadres in Anna Arivalayam as they are throng to Kauvery Hospital.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X