For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயலலிதாவுக்கு விஷம் கொடுத்ததற்கு ஆதாரம் இல்லை: பண்ருட்டி ராமச்சந்திரன் திட்டவட்டம்

பண்ருட்டி ராமச்சந்திரன் கூறுகையில், விஷம் கொடுத்தார்களா என்பது குறித்து யார் கருத்து கூறனும்? மருத்துவர்தான் சொல்ல வேண்டும். அப்படி எந்த மருத்துவரும் சொல்லவில்லை என்றார்.

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: ஜெயலலிதாவுக்கு விஷம் கொடுக்கப்பட்டது என்ற பி.எச்.பாண்டியனின் குற்றச்சாட்டு குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு சென்னையில் நிருபர்களிடம் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையின் பதிலளித்து கூறுகையில், ஜெயலலிதாவுக்கு உடல்நிலை சரியில்லை என்றதுமே என்போன்றோர் மருத்துவமனைக்கு சென்றோம். ஆனால் பி.எச்.பாண்டியன், அடுத்த நாள்தான் ஆஸ்பத்திரிக்கு வந்தார். இப்போது பேட்டியில் கூட எனக்கு பதவியிருந்தால்தான் அதிமுகவில் இருப்பேன் என்று கூறியுள்ளார் அவ்வளவுதான். அவருக்கு பதவிதான் முக்கியம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No evidence for poisoning Jayalalithaa: Panruti Ramachandran

பண்ருட்டி ராமச்சந்திரன் கூறுகையில், விஷம் கொடுத்தார்களா என்பது குறித்து யார் கருத்து கூறனும்? மருத்துவர்தான் சொல்ல வேண்டும். அப்படி எந்த மருத்துவரும் சொல்லவில்லை. ஒருவர் மீது பழி சுமத்துவது என்பது மிகவும் சுலபம். அப்படி பழி சுமத்துவது மிகவும் தவறு.

பொதுச்செயலாளராக சசிகலாவை நியமிக்க பொதுக்குழுவிற்கு அதிகாரம் கிடையாது என்று பி.எச்.பாண்டியன் கூறியுள்ளார். எம்ஜிஆரை திமுக பொதுக்குழுதான் கட்சியைவிட்டு நீக்கியிருந்தது. எனவே அவர் மனவருத்தம் காரணமாக, பொதுக்குழு மட்டும் இதுபோன்ற முடிவை தீர்மானிக்க கூடாது. எல்லா தொண்டர்களும் வாக்களிக்க வேண்டும் என்ற விதிமுறையை அதிமுகவில் எம்ஜிஆர் கொண்டுவந்தார். வேறு எந்த கட்சியிலும் இப்படி ஒரு விதிமுறை கிடையாது. இவ்வாறு பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்தார்.

English summary
No evidence for poisoning Jayalalitha, says Panruti Ramachandran.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X