For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹஜ் கூட்ட நெரிசலில் சிக்கி 2 இந்தியர்கள் பலி

Google Oneindia Tamil News

சென்னை: சவுதியில் புனித மெக்கா அருகே மினா நகர் கூட்ட நெரிசலில் சிக்கி 2 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மெக்கா அருகே உள்ள மினா நகரில் சாத்தான் மீது கல் எறியும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக லட்சக்கணக்கானோர் ஒரே இடத்தில் திரண்டிருந்தனர்.

No Indians affected in Mina stampede

அப்போது திடீரென அங்கே கூட்டநெரிசல் ஏற்பட்டது. இதில், 717 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 805க்கும் மேற்பட்ட யாத்ரீகர்களுக்கு படுகாயம் ஏற்பட்டது.

இந்த நிலையில் தற்போது இரண்டு இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாகவும் அவர்களின் பெயர் விவரமும் வெளியாகியுள்ளது. இருவரில் ஒருவர் பெயர் பிபி ஜான் இவர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர். இன்னொருவர் கேரள மாநிலம் கொடுங்கலூரைச் சேர்ந்த முகமது ஆவார்.

முன்னதாக, மினா நகர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களில் இந்தியர்கள் யாரும் இல்லை என ஹஜ் கமிட்டி துணை தலைவர் அபுபக்கர் தெரிவித்திருந்தார்.

இந்தாண்டு இந்தியாவில் இருந்து ஒரு லட்சத்து 28 ஆயிரம் பேர் மெக்காவிற்கு புனித பயணம் மேற்கொண்டுள்ளனர். அவர்களில் தமிழர்கள் 2,773 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
In a second major mishap in the Muslim holy city of Mina in Saudi Arabia, at least 717 people including an Indian, were killed and over 805 were injured during a stampede on Thursday, Sept 24.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X