For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பால் இல்லை, குடி நீர் இல்லை, பிரட் இல்லை, பிஸ்கெட் இல்லை, மெழுவர்த்தி இல்லை!- நொந்து போன மக்கள்

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை: பெரும் மழை, வெள்ளம் காரணமாக சென்னையில் பெரும்பாலான இடங்களில் பால், குடிநீர் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பாலுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதால் ஒரு லிட்டர் பால் ரூ. 80 முதல் ரூ. 100 வரை விற்பனை செய்யப்பட்டது.

அதே போல குடிநீர் கேன் ரூ. 60 முதல் ரூ. 80 வரை விற்கப்பட்டது.

No milk, no water, no bread, no food, no biscuit and no candles!: This is Chennai now

விலையை அதிகம் கொடுக்க மக்கள் தயாராக இருந்தாலும் பல இடங்களில் பாலும், குடிநீர் கேன்களும் கிடைக்கவில்லை.

இதனால் மக்கள் சொல்ல முடியாத அளவுக்கு அவதிக்குள்ளாயினர்.

வெள்ளநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் கடைகள் திறக்கப்படாத நிலையில் சில சூப்பர் மார்க்கெட்கள் மட்டும் திறக்கப்பட்டிருந்தன. இதனால் அந்தக் கடைகளில் கூட்டம் அலை மோதியது.

அங்கு பிரட், பிஸ்கெட், பால், தண்ணீர் பாட்டில்கள், காய்கறிகள், பழங்கள், முட்டை, பலசரக்குக்கள் வாங்க மக்கள் குவிந்தனர்.

இந்தப் பொருட்கள் கடையை திறந்த சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன. முட்டை, பிஸ்கெட், பிரெட்டும் காலியாகிவிட்டதால் பலர் குழந்தைகளின் நிலையை நினைத்தபடி கண் கலங்கியபடி திரும்பிச் சென்றனர்.

அதே போல பெரும்பாலும் மின்சாரம் இல்லாததால் மெழுவர்த்திகள் விலை பல மடங்காகிவிட்டது. கூடுதல் விலை தரத் தயாராக இருந்தாலும் மெழுவர்த்திகள் கிடைக்கவில்லை.

English summary
No milk, no water, no bread, no food, no biscuit and no candles!: This is Chennai now
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X