For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓசிப் பட்டாசு கேட்டு வராதீங்கப்பா...பட்டாசு ஆலை உரிமையாளர்கள் அதிரடி

Google Oneindia Tamil News

சிவகாசி: சிவகாசி பகுதியைச் சேர்ந்த பட்டாசு ஆலை உரிமையாளர்கள் பத்திரிக்கையில் செய்துள்ள விளம்பரம் அரசு அதிகாரிகள் மட்டத்தில் பெரும் தர்மசங்கடத்தையும், டென்ஷனையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

அதாவது ஓசி பட்டாசு கேட்டு வர வேண்டாம் என்றும், இலவச பட்டாசுகளைத் தர மாட்டோம் என்றும் அந்த விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது.

அதை விட முக்கியமாக, தொழில் பாதிப்பால் மன உளைச்சலில் உள்ள என்றும் அவர்கள் விளம்பரத்தில் சொல்லியிருப்பது அரசு அதிகாரிகளை நெளிய வைத்துள்ளது.

அந்த வில்லங்க விளம்பரம் குறித்த விவரம் இதோ...

ஓசி பட்டாசு பண்டல் பிளீஸ்...

ஓசி பட்டாசு பண்டல் பிளீஸ்...

ஆண்டுதோறும் தீபாவளி நெருங்கும்போது தங்களது உயர் அதிகாரிகளுக்கு ஐஸ் வைக்கும் வகையில், பட்டாசு பண்டல்களைக் கொடுத்து வாழ்த்து தெரிவிப்பது அதிகாரிகளின் வழக்கமாக உள்ளது.

ப்ரீயா கொடு ப்ரீயா கொடு மாமு...

ப்ரீயா கொடு ப்ரீயா கொடு மாமு...

இதற்காக சிவகாசியில்தான் அவர்கள் குண்டைப் போடுவார்கள். இத்தனை பட்டாசு பண்டல்களை அனுப்புமாறு அவர்கள் உத்தரவு போடுவார்கள். கொடுக்காவிட்டால் என்ன நடக்கும் என்பது கொடுக்காப்புளி சாப்பிடும் வயது உடைய சின்னப் பசங்க முதற்கொண்டு அத்தனை பேருக்கும் தெளிவாகத் தெரியும்.

இலவசத்தால் ஓய்ந்து போன பட்டாசு ஆலைகள்

இலவசத்தால் ஓய்ந்து போன பட்டாசு ஆலைகள்

அதிகாரிகளால் பிரச்சினை வரக் கூடாதே என்பதற்காக அவர்களுக்கு ஆண்டு தோறும் இலவசப் பட்டாசுகளை அனுப்பி வைப்பது பட்டாசு ஆலைகளின் வழக்கமாகும்.

யார் யாரு...

யார் யாரு...

இப்படி ஓசிப் பட்டாசு வாங்குவோரில் முதல் இடத்தில் இருப்பவர்கள் வருவாய்த்துறையினர் என்று சொல்கிறார்கள். அடுத்து காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர், தொழிலாளர் நலத்துறையினர், வணிகவரித்துறையினர், வெடிபொருள் கட்டுப்பாட்டு துறையினர் என்று வரிசையாக ஓசி பட்டாசு வாங்குவார்களாம்.

ஜீப் ஜீப்பாக

ஜீப் ஜீப்பாக

அலுவலக ஜீப்களை எடுத்துக் கொண்டு இந்த ஓசி பட்டாசுகளை வாங்க அதிகாரிகள் பட்டாசு ஆலைகளுகளுக்கு ஆட்களை அனுப்பி பட்டாசு பார்சல்களை வாங்கி வருவது வழக்கமாம்.

பத்திரிக்கையில் போட்டுட்டாங்களே...

பத்திரிக்கையில் போட்டுட்டாங்களே...

ஆனால் இப்போது பட்டாசு ஆலை அதிபர்கள் அனைவரும் ஒன்று கூடி இந்த இலவசத்துக்கு திடீர் தடை போட்டுள்ளனர். அதாவது பத்திரிக்கையில் விளம்பரம் செய்து அதிரடியாக நடவடிக்கையில் குதித்துள்ளனர்.

இந்த ஆண்டு இலவச பட்டாசு கேட்க வேண்டாம்....

இந்த ஆண்டு இலவச பட்டாசு கேட்க வேண்டாம்....

இப்படி ஒரு தலைப்பில் அந்த பத்திரிக்கை விளம்பரம் வெளியாகியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது...

பல சிரமம் -நெருக்கடி

பல சிரமம் -நெருக்கடி

பட்டாசு தொழில் பல்வேறு சிரமங்களையும் நெருக்கடிகளையும் சந்தித்து வருகிறது. உற்பத்தி குறைந்துவிட்டது.

மன உளைச்சலில் இருக்கிறோம்

மன உளைச்சலில் இருக்கிறோம்

இதனால், பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கடும் மன உளைச்சலில் இருக்கின்றனர். பட்டாசு மூலப்பொருட்களின் விலையும் அதிகரித்துவிட்டது. இது இலவசமாகவோ மானிய விலையிலோ கிடைப்பது இல்லை.

புரிஞ்சுக்குங்கப்பா.. ப்ளீஸ்.. நன்றி வணக்கம்

புரிஞ்சுக்குங்கப்பா.. ப்ளீஸ்.. நன்றி வணக்கம்

எனவே, இந்த இக்கட்டான சூழ்நிலையை புரிந்துகொண்டு அனைத்துத் துறை அதிகாரிகள், உற்றார் உறவினர்கள் யாரும் இலவச பட்டாசு கேட்டு எங்கள் மனதை புண்படுத்த வேண்டாம்.... நன்றி வணக்கம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

மன உளைச்சல்...

மன உளைச்சல்...

இப்படிக்கு தொழில் பாதிப்பால் மன உளைச்சலில் உள்ள பட்டாசு உற்பத்தியாளர் சங்கங்கள் என்று கீழே போட்டுள்ளனர்.

மானம் போயிருச்சே.. மாப்ளே...

மானம் போயிருச்சே.. மாப்ளே...

இந்த விளம்பரம் அரசு அதிகாரிகள் மட்டத்தில் பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதாம். மானம் போயிருச்சே என்ற புலம்பலை கேட்க முடிகிறதாம்....

இந்த விளம்பரத்திற்காக என்ன மாதிரியான ஆப்டர்ஷாக்குகளை சந்திக்கப் போகிறார்களோ பட்டாசு ஆலை அதிபர்கள்.. இது மக்களின் மைன்ட் வாய்ஸ்.

English summary
Cracker firms in Sivakasi have declared that they wont give free crackers anymore to govt officials.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X