For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இது நிலையான அரசு... அவங்கதான் மைனாரிட்டி அரசு... ஈபிஎஸ் அதிரடி - வீடியோ

அதிமுக அரசு நிலையான அரசு... திமுகதான் மைனாரிட்டியாக அரசாக இருந்தது என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: இது பினாமி அரசு, சுனாமி அரசு, ஜெராக்ஸ் அரசு என்று கூறுகின்றனர். இது 122 எம்எல்ஏக்கள் ஆதரிக்கும் நிலையான அரசு என்று புதுக்கோட்டையில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

புதுக்கோட்டையில் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை திறப்பு விழா வெள்ளிக்கிழமை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி கலந்து கொண்டு புதிய அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையை திறந்து வைத்தார். மேலும் அரசு சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி பேசினார்.

No more instale govt, sys CM EPS

முதன் முறையாக புதுக்கோட்டைக்கு வந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. புதுக்கோட்டை நகர் முழுவதும் முதல்வரை வரவேற்று பிரமாண்ட பேனர்கள், அலங்கார வளைவுகள் வைக்கப்பட்டிருந்தன.

விழாவில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலினை ஒரு பிடி பிடித்தார். இது பினாமி அரசு, சுனாமி அரசு என்று கூறுகின்றனர். இது 122 எம்எல்ஏக்கள் ஆதரிக்கும் நிலையான அரசு.

திமுகவினர்தான் மைனாரிட்டி அரசாக இருந்தது. இது ஜெயலலிதாவின் ஆசியோடு நடக்கும் நிலையான அரசு என்று கூறினார்.

English summary
CM Edappadi Palanisamy has said that there is no instability in the state
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X