For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இல. கணேசன் என்ன சொல்றார்னு பாருங்க...!

Google Oneindia Tamil News

சிவகாசி: உள்ளாட்சித் தேர்தலில் இப்போது உள்ள பாஜக கூட்டணிதான் தொடருமாம். புதிதாக யாரையும் சேர்க்க மாட்டார்களாம். இதை பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கூறியுள்ளார்.

தமிழக சட்டசபைத் தேர்தலில் பாஜக இரண்டு குட்டியூண்டு கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டு படு தோல்வியைத் தழுவியது. அதேசமயம், அதன் வாக்கு வங்கியில் பெரிய அளவில் பழுது ஏற்படவில்லை. எப்போதும் இருக்கும் வாக்கு சதவீதமே இந்தத் தேர்தலில் அதற்குக் கிடைத்தது. இதனால் பாஜக தரப்பு ரொம்ப வருத்தப்படவில்லை.

No more parties to be invited to BJP alliance, says Ila Ganesan

இந்த நிலையில் சிவகாசிக்கு வந்த இல.கணேசன் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், வருகிற 24, 25-ந்தேதிகளில் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் பழனியில் நடைபெற உள்ளது. சமீபத்தில் சென்னையில் கட்சியின் தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளை தொடங்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் புதிதாக யாரையும் கூட்டணியில் சேர்க்க மாட்டோம். 2011 தேர்தலைவிட இந்த சட்டசபை தேர்தலில் அதிக வாக்குகள் பெற்றுள்ளோம். எனவே உள்ளாட்சி தேர்தலை நம்பிக்கையுடன் எதிர் கொள்வோம் என்றார் இல.கணேசன்.

English summary
Senior BJP leader Ila Ganesan has said that there will be no more parties to be included in the NDA for the local body elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X