For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ. பங்களா விவகாரத்தில் தலையிட பொதுஅறிவு இருந்தால் போதும்... ஓபிஎஸ்-க்கு டிகேஎஸ் பதிலடி

ஜெயலலிதா பங்களா விவகாரத்தில் தலையிட சட்டம்படித்து வக்கீலாக இருக்கவேண்டிய அவசியமில்லை. பொது அறிவு இருந்தால் போதும் என்று திமுகவின் எம்.பி. டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

By Devarajan
Google Oneindia Tamil News

சென்னை: ஜெயலலிதா பங்களா விவகாரத்தில் தலையிட சட்டம்படித்து வக்கீலாக இருக்கவேண்டிய அவசியமில்லை. பொது அறிவு இருந்தால் போதும் என்று திமுகவின் எம்.பி. டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, சென்னையில் செய்தியாளர்களிடம் டிகேஎஸ் இளங்கோவன் கூறியதாவது:

 No need to have Knowledge on Law to interfere Jayalalitha's Bungalow issue says TKS Elangovan

தனியார் சொத்தை அரசு பறிமுதல் செய்ய முடியாது. ஜெயலலிதா பங்களாவை சட்டப்படி நினைவில்லமாக்க முடியாது. அது பற்றி கூற வக்கீல் தேவையில்லை. பொது அறிவு இருந்தால் போதும்.

எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது, தேவையெனில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்படும். அதிமுக அரசு தானாகவே கவிழ்ந்துவிடும்.

இவ்வாறு இளங்கோவன் கூறினார்.

முன்னதாக, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில், 'ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் பங்களாவை நினைவிடமாக்குவது சட்டப்படி தவறு' என கூறியிருந்தார். இது அதிமுகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதனையடுத்து, மு.க. ஸ்டாலின் கருத்துக்கு பதில்கூறிய, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், " ஜெயலலிதா இல்லம் நினைவிடமாக்குவது குறித்து கருத்து சொல்ல, ஸ்டாலின் சட்டம் படித்த வக்கீல் அல்ல. அதிமுக அணிகள் இணைவது குறித்து விரைவில் நல்ல முடிவு வரும்" என்று தெரிவித்து இருந்தார். ந்த நிலையில் டிகேஎஸ் இளங்கோவன் மேற்கண்டவாறு கூறியுள்ளது அதிமுக, திமுக கட்சியினர் மத்தியில் விவாதத்தை எழுப்பியுள்ளது.

English summary
DMK MP TKS Elangovan said, 'No need to have Knowledge on Law to interfere Jayalalitha's Bungalow issue to the Press.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X