For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போயஸ்கார்டனில் நடந்த சோதனைக்கும் மாநில அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை - முதல்வர்

ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை கோவிலாக கருதுகிறோம். வருமான வரி சோதனைக்கும் மாநில அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: வருமான வரித்துறை மத்தியஅரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. மாநில அரசுக்கும், வருமானவரித்துறை சோதனைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் வருமாவரித்துறை சோதனை பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

No one know about the IT raid in Poes Garden, says CM

அதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, யாரால் இந்த சோதனை நடைபெற்றது என்று அனைவருக்கும் தெரியும் என்றார்.

ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை கோவிலாக கருதுவதனால்தான் நினைவு இல்லமாக அறிவித்தோம். ஆனால் அளவிற்கு அதிகமாக வரிஏய்ப்பு செய்து சொத்து சேர்த்தவர்களை வருமானவரித்துறையினர் சோதனை செய்தனர்.

வருமானவரித்துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த சோதனைக்கும், மாநில அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. போயஸ்கார்டனில் என்ன சோதனை நடந்தது என்று யாருக்கும் தெரியாது என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

போயஸ்கார்டனில் நேற்று நடந்த சோதனை பற்றி இதுவரை வாய் திறக்காமல் இருந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முதன்முறையாக மவுனம் கலைந்துள்ளார்.

English summary
CM Edappadi Palanisamy said that nobody knows about the IT raids in Poes Garden and there is no link with the State govt.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X