For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மக்கள் நலக் கூட்டணி இதுவரை ஒரு இடத்தில் கூட முன்னிலையில் இல்லை!

By Shankar
Google Oneindia Tamil News

சென்னை: மாற்று அரசியலுக்கான முயற்சி என்று வர்ணிக்கப்பட்ட மக்கள் நலக் கூட்டணி, இந்தத் தேர்தலில் இதுவரை ஒரு இடத்தில் கூட முன்னணியில் இல்லை.

பெரும் எதிர்ப்பார்ப்புக்களுக்கு மத்தியில் தேர்தல் களத்தைச் சந்தித்தது மக்கள் நலக் கூட்டணி - தேமுதிக - தமாகா இணைந்த கூட்டணி. வைகோவின் ஒருங்கிணைப்பில் உருவான இந்தக் கூட்டணி, அதிமுக, திமுக இரு கட்சிகளுக்குமே ஒரு அச்சுறுத்தலாகவே அமைந்தது.

No place for Makkal Nala Koottani in lead position

மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள் இணைந்த மக்கள் நலக் கூட்டணியாக இருந்த வரை, மதிப்பு மிக்க அணியாகத் திகழ்ந்தது. விஜயகாந்தின் தேமுதிக உள்ளே வந்தது கூட பிரச்சினையில்லை. ஆனால் விஜயகாந்தை கூட்டணித் தலைவராகவும் முதல்வர் வேட்பாளராகவும் அறிவித்ததுமே அந்தக் கூட்டணி மீதிருந்து மரியாதை கலகலக்க ஆரம்பித்துவிட்டது.

இன்னொரு பக்கம் தேர்தல் பிரச்சாரக் களத்தில் ஜொலித்திருக்க வேண்டிய மநகூ தலைவர்கள் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானார்கள்.

இப்போது தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணப்படும் நிலையில், 162 தொகுதிகளுக்கான முன்னணி நிலவரம் வெளியாகியுள்ளது. இவற்றில் ஒரு தொகுதியில் கூட மக்கள் நலக் கூட்டணி முன்னணியில் இல்லை.

நாம் தமிழர் கட்சி, பாமக, பாஜக போன்றவையும் எந்தத் தொகுதியிலும் முன்னணியில் இல்லை.

English summary
Makkal Nala Koottani has miserably failed to lead even one constituency in this election 2016.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X