For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கடலை ஆட்கொண்ட கச்சா எண்ணெய்... செத்து மிதக்கும் கடல் உயிரினங்கள்... எங்கே போனது பீட்டா?

சென்னை கடலில் கலந்துள்ள கச்சா எண்ணெய்யால் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்பட்டுள்ளதோடு ஏராளமான கடல வாழ் உயிரினங்களும் செத்து மிதக்கின்றன. அரசியல் கட்சியினரோ அல்லது பீட்டா அமைப்பினரோ இதுவரை இதனை சுத்தம் செய

Google Oneindia Tamil News

சென்னை: கடற்பரப்பு முழுவதையும் ஆட்கொண்ட கச்சா எண்ணெய்யால் ஏராளமான கடற்வாழ் உயிரினங்கள் செத்து மிதக்கின்றன. இதனை சுத்தம் செய்ய க்ளீன் இந்தியா திட்டத்தை அறிமுகப்படுத்திய பாஜகவினரோ அல்லது ஜல்லிக்கட்டுக்க மல்லுக்கட்டிய பீட்டா அமைப்போ இதுவரை முன்வரவில்லை.

கடந்த 28ஆம் தேதி சென்னை எண்ணூர் துறைமுகம் அருகே இரண்டு கப்பல்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் எண்ணெய்க் கப்பலில் இருந்த 40 டன் கச்சா எண்ணெய் கசிந்து கடற்பரப்பு முழுவதும் பரவியது.

இதனால் சென்னை எண்ணூர் முதல் திருவான்மியூர் வரை பரவிய கடற்பரப்பில் கச்சா எண்ணெய்யால் கடல் மாசுபாடு ஏற்பட்டுள்ளது. எண்ணெய் படலத்தை அகற்ற எந்திரங்கள் கைகொடுக்காததால் கடலோர காவல் படையினரும் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களும் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பக்கெட்டால் அள்ளப்படும் கச்சா எண்ணெய்

பக்கெட்டால் அள்ளப்படும் கச்சா எண்ணெய்

பக்கெட் கொண்டே ஊழியர்கள் கச்சா எண்ணெயை அகற்றி வருவதால் 7 நாட்களாகியும் சுத்தம் செய்யும் பணியில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. கடலில் போடப்பட்டுள்ள மீனவர்களின் வலைகள் மீதும் கச்சா எண்ணெய் படர்ந்துள்ளதல் மீன்பிடித் தொழில் முடங்கியுள்ளது.

எங்கே போனாங்கள் க்ளீன் இந்தியா?

எங்கே போனாங்கள் க்ளீன் இந்தியா?

7 நாட்களாகியும் கச்சா எண்ணெய்யை சுத்தம் செய்ய எந்த அரசியல் கட்சியும் தொண்டு நிறுவனங்களும் இதுவரை முன்வரவில்லை. க்ளீன் இந்தியா திட்டத்தை அறிமுகப்படுத்திய பாஜகவினரோ அல்லது ஆர்எஸ்எஸ் அமைப்பினரோ இதுவரை கச்சா எண்ணெய் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தலைக் காட்டவில்லை.

அரசியல் கட்சியினர் எங்கே?

அரசியல் கட்சியினர் எங்கே?

கப்பல்கள் விபத்துக்குப் பிறகு துறைமுகப் பகுதியில் பார்வையிட்ட மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனும் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபடுமாறு கட்சியினருக்கு அறிவுறுத்தவில்லை. மாணவர் போராட்டத்தோடு போட்டி போட்ட திமுகவோ அல்லது ஆளும் அதிமுக கட்சியினரோ சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடாமல் உள்ளனர்.

பீட்டா கண்களுக்கு தெரியவில்லை

பீட்டா கண்களுக்கு தெரியவில்லை

கச்சா எண்ணெய் படலத்தில் சிக்கி திணறி ஏராளமான ஆமைகள், நண்டுகள் மற்றும் மீன்கள் கடலோரத்தில் செத்து கரை ஒதுங்கியுள்ளன. ஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தப்படுவதாக கூறி மல்லுக்கட்டிய பீட்டா அமைப்புக்கு கடல்வாழ் உயிரினங்கள் மடிவது ஏன் தெரியவில்லை.

பீட்டா ஏன் முன்வரவில்லை?

பீட்டா ஏன் முன்வரவில்லை?

ஜல்லிக்கட்டை தடை செய்ய மட்டும் புயல்வேகத்தில் செயல்பட்ட பீட்டா, கச்சா எண்ணெயில் சிக்கி சாகும் கடல் வாழ் உயிரினங்களை காப்பாற்ற என்ன முயற்சி எடுத்துள்ளது? மீனவர்களின் வாழ்வாதாம் பாதிக்கப்பட்டு தொற்று நோய் உருவாகும் ஆபத்து ஏற்பட்டுள்ள நிலையில் கடற்பரப்பை சுத்தப்படுத்த யாரும் ஏன் முன்வரவில்லை என்பதே மக்களின் கேள்வியாக உள்ளது.

English summary
crude oil floated through the seashore of chennai. But no political parties are not involved in cleaning the sea. Even BJP's clean india, RSS, Peta also not intereted to clean the sea.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X