For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கண்டுகொள்ளாத மக்கள்... கேரளாவில் இருந்து அவசரமாக டெல்லி திரும்பிய அமித்ஷா!

உத்திரபிரதேச முதல்வர் யோகி, பிஜேபி தலைவர் அமித் ஷாவுடன் இணைந்து கேரளா மாநிலத்தில் "மக்கள் பாதுகாப்பு பேரணி" என்ற தலைப்பில் அணிவகுப்பு நடத்தி வந்தனர். ஒரு வாரம் நடக்கும் இந்தப் பேரணியில் இருந்து

By Shyamsundar
Google Oneindia Tamil News

கன்னூர் : கேரளா மாநிலத்தில் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்.ன் வலிமையைக் காட்டும் வகையில் அமித்ஷா தலைமையில் பேரணி நடத்தப்பட்டு வருகிறது. ஒருவாரம் நடக்க இருக்கும் இந்தப் பேரணியில் உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத்தும் கலந்து கொண்டுள்ளார்.

பெரிய அளவில் நடத்தப்பட திட்டமிடப்பட்டிருக்கும் இந்தப் பேரணியில் இருந்து தற்போது எதிர்பாராத வகையில் அமித் ஷா வெளியேறியுள்ளார். அமித் ஷா வெளியேறியதற்கு அம்மாநில மக்கள் போதிய அளவில் அந்த நிகழ்வை கண்டுகொள்ளாததே காரணம் என கூறப்பட்டுள்ளது.

No response from the people... amith shah left kerala!

கேரளாவில் பாஜகவின் வலிமையை காட்டும் விதத்திலும் இந்தப் பேரணியை நடத்த திட்டமிட்டிருந்த பாஜகவிற்கு இது பெருத்த இடியாக உள்ளது. பேரணியைக் காண போதிய அளவு கூட்டம் வராததால் பாஜக கட்சி நிர்வாகிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தகவலை மறுத்துள்ள சில பாஜக நிர்வாகிகள் , "அமித் ஷா டெல்லியில் முக்கிய வேலை இருப்பதால் மட்டுமே அங்கு செல்வதாகவும், மீண்டும் விரைவில் வந்து பேரணியில் கலந்து கொள்வார்' என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலும் அவர் மோடி அழைப்பின் பேரிலேயே அங்கு செல்வதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

டெல்லியில் இன்று மாலை மோடி மற்றும் அருண்ஜேட்லி அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர். அதில் அமித்ஷா பங்கேற்றார். சட்டசபை தேர்தல்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய போது கேரளா முதல்வர் பினராயி விஜயன் " அமித்ஷா ஒரு அணைந்து போன வெடி'' என்று குறிப்பிட்டார். பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் ல் இருக்கும் அனைவருமே அணைந்து போன வெடிக்கள்தான் என்றும் குறிப்பிட்டார். கேரளா மக்கள் பாஜகவுக்கு ஆதரவு அளிக்க மாட்டார்கள் என் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது

English summary
Amith sha 's march with Uttarapradesh chief minister yogi adhithya nath failed in kerala. Amith shah got disappointed and left kerala. Will reach Delhi today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X