For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக கோவில்களில் பூ, பழம் விற்க அனுமதி கிடையாது.. இந்து அறநிலையத்துறை அதிரடி

புராதன கோவில்களில் பூ, பழம் உள்ளிட்ட பூஜை பொருள் விற்பனைக்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    திருமுருகன்காந்தி மீதான பிடிவாரண்டை ரத்து | தமிழக கோவில்களில் பூ, பழம் விற்க அனுமதி கிடையாது

    சென்னை: புராதன கோவில்களில் பூ, பழம் உள்ளிட்ட பூஜை பொருள் விற்பனைக்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சில மாதங்களுக்கு முன் தீ விபத்து நிகழ்ந்தது. இதில் வீரவசந்தராயர் மண்டபம் அதிகமாக சேதம் அடைந்தது. இந்த சம்பவம் பக்தர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    No sale for groceries inside the temple says Hindu Religious and Charitable Endowments

    இதனால் சில கோவில்களில் தீபம் ஏற்ற தடைவிதிக்கப்பட்டு வருகிறது. அதன்பின் அனைத்து கோவில்களுக்கு உள்ளே உள்ள கடைகளை அகற்ற வேண்டும் என தமிழக முதல்வர் உத்தரவு பிறப்பித்தார்.

    ஆனால் இந்து சமய அறநிலையத்துறை அறநிலைய துறைக்கு உட்பட்ட கோவில் வாளாகத்தில் பூ, மாலை உள்ளிட்ட பூஜை பொருள்கள் விற்பனை செய்யலாம் என்ற சுற்றறிக்கையை கோவில்களுக்கு அனுப்பியது. இதற்கு தடை கிடையாது என்று கூறியது.

    இந்த நிலையில் இதற்கு எதிரான வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடந்து வந்தது. அதில் நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத் துறை புதிய பதில் மனு அளித்துள்ளது.

    அதன்படி புராதன கோவில்களில் பூ, பழம் உள்ளிட்ட பூஜை பொருள் விற்பனைக்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளோம். தமிழகத்தில் அறநிலைய துறைக்கு உட்பட்ட கோவில் வாளாகத்தில் பூ, மாலை உள்ளிட்ட பூஜை பொருள்கள் விற்பனை செய்யலாம் என்ற சுற்றறிக்கையை திரும்ப பெறுகிறோம், என்றுள்ளது.

    English summary
    No sale for groceries inside the temple says Hindu Religious and Charitable Endowments.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X