For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் முழு வறட்சி இல்லை... சுப்ரீம்கோர்ட்டில் பகீர் பொய் சொன்ன எடப்பாடி அரசு

தமிழகத்தில் முழுமையான வறட்சி இல்லை என உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி அரசு தெரிவித்துள்ளது.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் முழுமையான வறட்சி என்பதே இல்லை என உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 140 ஆண்டுகளில் இல்லாத வறட்சி கோரத்தாண்டவமாடுகிறது. இதனால் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாண்டுபோயுள்ளனர்.

வறட்சி மாநிலம்

வறட்சி மாநிலம்

இதையடுத்து தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அறிவித்தார். வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்துக்கு மத்திய அரசு கூடுதல் நிதி வழங்கவும் தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது.

வறட்சியே இல்லை- தமிழக அரசு

வறட்சியே இல்லை- தமிழக அரசு

இந்நிலையில் தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலையைத் தடுக்க கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் இன்றைய விசாரணையின் போது தமிழகத்தின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நரசிம்மா, தமிழகத்தில் முழு வறட்சி இல்லை; ஆங்காங்கே ஒரு சில இடத்தில் வறட்சி இருக்கிறது என கூறினார்.

விவசாயிகள் எதிர்ப்பு

விவசாயிகள் எதிர்ப்பு

இதனை விவசாயிகள் தரப்பு வழக்கறிஞர்கள் கடுமையாக எதிர்த்து வாதிட்டனர். இதனையடுத்து, கடனைக் கட்டாத விவசாயிகளிடம் வங்கிகள் கடுமையாக நடந்து கொள்ளக் கூடாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தமிழக அரசுக்கு உத்தரவு

தமிழக அரசுக்கு உத்தரவு

அத்துடன் விவசாயிகள் தற்கொலையைத் தடுக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். இந்த வழக்கு விசாரணை ஆகஸ்ட் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

English summary
The Supreme Court told that should be no coercive steps against farmers reeling under drought to recover loans in Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X