For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழக அரசியல் கட்சிகள் விவசாயிகள் பிரச்னையில் துணை நின்றது இல்லை: அய்யாக்கண்ணு

தமிழக அரசியல் கட்சிகள் விவசாயிகள் பிரச்னையில் துணை நின்றது இல்லை என்று அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

காஞ்சிபுரம் : தமிழக அரசியல் கட்சிகள் என்றைக்குமே விவசாயிகள் பிரச்னையில் துணை நின்றது இல்லை என்று தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் மாநில சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், மரபணு விதைகளுக்கு எதிராக விழிப்பு உணர்வு பயணம் மேற்கொண்டுள்ள தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு நேற்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் பயணம் மேற்கொண்டார்.

No TN Political Parties stood for farmers problem says Aiyakannu

காஞ்சிபுரம் மாவட்டத்தின் மதுராந்தகம், எண்ணத்தூர், உத்திரமேரூர், வேடந்தாங்கல் பகுதிகளில் விழிப்பு உணர்வு பிரசாரம் செய்த அவர், மாவட்ட ஆட்சியர் பொன்னையாவை சந்தித்துப் பாலாற்றில் தடுப்பணை கட்டுவது குறித்தும், சீமைக்கருவேல மரங்கள் அகற்றுவது குறித்தும் மனு அளித்தார்.

பின்பு நிருபர்களைச் சந்திக்கையில், விவசாயிகளுக்கான உற்பத்தி பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க யாரும் முயற்சி செய்யவில்லை. எல்லா ஆட்சியிலும் விவசாயிகள் அடிமையாகவே இருந்து வந்துள்ளனர்.

அதிமுக, திமுக, விசிக உள்ளிட்ட எந்த கட்சியும் விவசாயிகளின் பிரச்னையில் உறுதுணையாக இருந்தது இல்லை. மத்திய, மாநில அரசுகள் இனி எந்த திட்டத்திற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தினால் அதனை தொடர்ந்து எதிர்ப்போம். நிச்சயம் நீதிமன்றம் செல்வோம் என்று தெரிவித்துள்ளார்.

English summary
No TN Political Parties stood for farmers problem says Aiyakannu. Farmers association leader Aiyakkannu says that, Farmers will not allow central or state Government to occupy lands.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X