For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காவிரி நீருக்காக போராடுவதில் தமிழகத்தில் ஒற்றுமையில்லை - ஸ்டாலின் #Rail roko

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: கர்நாடகத்தில் காவிரி பிரச்சனையில் அனைத்துக் கட்சியினரும் ஒன்றிணைந்து போராடுகின்றனர். மேலும் காவிரி நீருக்காக நியாயமாக போராட்டம் வேண்டிய தமிழகத்தில் ஒன்றுமை இல்லை என்று எதிர்கட்சித்தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்த மத்திய அரசைக் கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும் தமிழகத்தில் 48 மணிநேர ரயில் மறியல் போராட்டத்திற்கு விவசாயிகள் அழைப்பு விடுத்தனர். இந்த போராட்டத்திற்கு அதிமுக, பாஜக தவிர அனைத்து கட்சியினரும் ஆதரவு அளித்தனர்.

No unity in Tamil Nadu in Cauvery issue, says Stalin

சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் பெரம்பூர் ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட ஆயிரத்துக்கும் மேற்பட்ட திமுகவினர் ஊர்வலமாக வந்தனர். இன்று காலை ஒன்பது மணியளவில் தொடங்கிய இப்போராட்டம், சில மணி நேரங்கள் நீடித்தது.

தண்டவாளத்திற்கு ஸ்டாலின் உள்ளிட்டோர் மறியல் செய்தனர் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

அதிகமான எண்ணிக்கையிலான நபர்கள் இருந்ததால், கைது செய்யப்பட்டவர்கள் தொடர்ச்சியாக பேருந்துகள் மூலமாக ஓட்டேரியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்துக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இதன் காரணமாக ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கைதான அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

No unity in Tamil Nadu in Cauvery issue, says Stalin

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்த மத்திய அரசைக்கண்டித்து போராட்டம் நடைபெற்றது என்று கூறினார். கர்நாடகத்தில் காவிரி பிரச்சனையில் அனைத்துக் கட்சியினரும் ஒன்றிணைந்து போராடுகின்றனர். மேலும் காவிரி நீருக்காக நியாயமாக போராட்டம் வேண்டிய தமிழகத்தில் ஒன்றுமை இல்லை என்று ஸ்டாலின் குற்றம்சாட்னார். கருணாநிதி அறிவுரையின் பேரில் திமுகவினரும் விவசாயிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்று கூறிய ஸ்டாலின், நாளை நடைபெறும் ரயில் மறியல் போராட்டத்திலும் திமுக பங்கேற்கும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.

English summary
DMK leader MK Stalin has said that there is no unity in the state in the Cauvery issue. DMK will continue its fight in the issue, he added.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X