For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முக்கொம்பு மேலணை மதகுகள் உடைந்த விவகாரம்.. கரையோர மக்களுக்கு எச்சரிக்கை இல்லை.. ஆட்சியர் விளக்கம்

முக்கொம்பு மேலணையின் 9 மதகுகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவத்தில், கரையோர மக்களுக்கு எச்சரிக்கை இல்லை என திருச்சி மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    முக்கொம்பு அணை.. மதகுகள் உடைந்து நொறுங்கும் அவலம்!- வீடியோ

    திருச்சி: முக்கொம்பு மேலணையின் 9 மதகுகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவத்தில், கரையோர மக்களுக்கு எச்சரிக்கை இல்லை என திருச்சி மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார்.

    கொள்ளிடம் முக்கொம்பு மேலணையில் 9 மதகுகள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது.முக்கொம்பு மேலணையின் 8 மதகுகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவத்தில், கரையோர மக்களுக்கு எச்சரிக்கை இல்லை என அங்கு ஆய்வு நடத்திய பின்னர் திருச்சி மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார்.

    No warning for Coastal people: Trichy collector Rajamani

    1836-ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் காலத்தில் திருச்சியையடுத்த முக்கொம்பில் கட்டப்பட்டது மேலணை. இதில் மொத்தம் 45 மதகுகள் உள்ளன.

    இந்த அணையில் இருந்து தண்ணீர் காவிரி, கொள்ளிடம் மற்றும் கால்வாய்களில் பிரித்து அனுப்பப்படுகிறது. நீர் வரத்தால், முக்கொம்பு மேலணை நிரம்பி வழிகிறது. எனவே, வினாடிக்கு ஒரு லட்சம் கன அடியை கடந்து கொள்ளிடத்திற்கு நீர் திறக்கப்பட்டு வந்தது.கர்நாடக மாநிலத்தில் கடந்த சில வாரங்களாகப் பெய்துவந்த கனமழை காரணமாக காவிரி ஆற்றில் அதிக அளவு தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

    No warning for Coastal people: Trichy collector Rajamani

    ஏற்கெனவே கடந்த சில தினங்களுக்கு முன்னர், காவிரி ஆற்றில் அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்ட போது கொள்ளிடம் பாலம் உடைந்து ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது. இந்நிலையில் இன்று இரவு சுமார் 9 மணியளவில் முக்கொம்பு மேலணையில் உள்ள 8 மதகுகள் திடீரென ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. தண்ணீரின் அழுத்தம் அதிகரித்த நிலையில், 8 மதகுகள் இன்று இரவு உடைபட்டு சுமார் 90 ஆயிரம் கன அடி நீர் சீறிப்பாய்ந்து வெளியேறியது.

    மதகுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதை அடுத்து அங்கு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், மதகுகள் உடைந்த நிலையில் அணையின் கீழ்பாலத்தின் நடுவே உள்ள ஒரு பகுதியும் உடைந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது.இந்நிலையில், அணையின் மதகுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதை அடுத்து நேற்று இரவு திருச்சி ஆட்சியர் ராசாமணி அங்கு ஆய்வு செய்தார்.

    No warning for Coastal people: Trichy collector Rajamani

    ஆய்வுக்குப் பின்னர் அவர் கூறுகையில், மதகுகள் உடைந்திருந்தாலும் நீர் திறப்பு குறைவு என்பதால் கொள்ளிடம் ஆற்று கரையோர மக்களுக்கு எச்சரிக்கை எதுவும் இல்லை என்றும், நாளை மீண்டும் ஆய்வு செய்யப்பட்டு, மறு சீரமைப்பு பணி குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

    முக்கொம்பு கொள்ளிடம் அணை இடிந்தது தொடர்பாக தமிழக அரசின் பொதுப்பணித்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் செந்தில்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, முக்கொம்பு கொள்ளிடம் அணையில் உள்ள மொத்தம் 45 மதகுகளில் 6-ம் எண் முதல் 13-ம் எண் வரை உள்ள மொத்தம் 8 மதகுகள் இடிந்து விழுந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு விட்டன. மிகவும் பழமையான இந்த அணையின் மதகுகள் இடிந்து விழுந்ததற்கான காரணம் என்ன என்பது பற்றி ஆய்வு செய்து வருகிறோம்.

    No warning for Coastal people: Trichy collector Rajamani

    மேட்டூர் அணையில் இருந்து முக்கொம்புக்கு வினாடிக்கு சுமார் 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் தான் வந்து கொண்டிருக்கிறது. இதில் காவிரியில் 32 ஆயிரம் கன அடி தண்ணீரும் கொள்ளிடத்தில் 8 ஆயிரம் கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டது. இந்த நிலையில் தான் கொள்ளிடம் அணையின் 8 மதகுகள் இடிந்து விழுந்து உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

    திருச்சியில் இருந்து முசிறி செல்லும் பாதையில் முக்கொம்பு பகுதியில் இந்தப் பாலம் உள்ளது. இந்தப் பாலத்தில் உள்ள 7 மதகுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. மொத்தம் இந்தப் பாலத்தில் 45 மதகுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. பாலம் அடித்துச் செல்லும் போது பாலத்தில் பயணம் செய்து கொண்டிருந்தவர்கள் இருபுறமும் திரும்பிச் சென்றுவிட்டதால் யாருக்கும் பாதிப்பு இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

    இதனால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். மக்கள் யாரும், அந்த பக்கம் வரக் கூடாது என்பதால், அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கரையோர கிராம மக்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    English summary
    Trichy collector Rajamani has said there in No warning for Coastal people. Due to high flood in the Cauvery river 9 Culverts broken last night in Trichy Mukkombu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X