For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மத்திய பாஜக அரசுக்கு ஆதரவாக வாக்களித்து அபார வெற்றி பெறச் செய்த அதிமுக!

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக- வீடியோ

    சென்னை: நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராக அதிமுக வாக்களித்துள்ளது. இதன் மூலம், பாஜக அரசுக்கு ஆதரவாக அதிமுகவினர் வாக்களித்துள்ளனர்.

    மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை தெலுங்கு தேசம் கட்சி லோக்சபாவில் கொண்டுவந்தது. இன்று முழுக்க விவாதம் நடைபெற்று இரவு 11 மணியளவில் வாக்கெடுப்பு நடைபெற்றது.

    No way will AIADMK support No Confidence Motion: V Maitreyan,AIADMK MP

    இந்த சூழ்நிலையில், அதிமுகவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் சுற்றி வந்தது. அதிமுக தலைமையிடம் பாஜக தலைவர் அமித்ஷா ஆதரவு கோரி தொலைபேசியில் தொடர்பு கொண்டதாகவும் ஒரு தகவல் உலவியது.

    இந்த நிலையில், நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு இல்லை என மைத்ரேயன் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று தெரிவித்தார்.
    காங்கிரசும், திமுகவும் ஆதரிக்கும் தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு கிடையாது என்று மைத்ரேயன் காரணம் தெரிவித்தார்.

    நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்து அதிமுக வெளிநடப்பு செய்யும் என்றுதான் இதுவரை எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், மைத்ரேயன் கூறுவதை வைத்து பார்க்கும்போது, அநேகமாக நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்று பாஜகவுக்கு ஆதரவாக அதாவது நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிராக அதிமுக வாக்களிக்கும் என்று தெரிகிறது.

    நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அது உறுதியானது. வாக்கெடுப்பு நடைபெற்றபோது அதிமுக உறுப்பினர்கள் அவையில்தான் இருந்தனர். அரசுக்கு ஆதரவாக 325 வாக்குகள் கிடைத்தன. ஒருவரும் வாக்கெடுப்பை உள்ளே இருந்தபடி புறக்கணிக்கவில்லை. நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக 126 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. எனவே அதிமுக பாஜக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தது உறுதியாகியுள்ளது.

    அதிக வாக்குகள் வித்தியாசத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடிக்க வேண்டும் என்பதே பாஜக மூவ் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    The No Confidence Motion is spearheaded by Congress and DMK, so no way will AIADMK support it says V Maitreyan,AIADMK MP
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X