ஸ்டாலினுடன் நோபல் பரிசு வென்ற கைலாஷ் சத்யார்த்தி சந்திப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : நோபல் பரிசு வென்ற கைலாஷ் சத்யார்த்தி சென்னை ஆழ்வார்பேட்டையில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தார்.

இந்திய சிறுவர் உரிமைகளுக்கான செயற்பாட்டாளரும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான கைலாஷ் சத்யார்த்தி சென்னையில் உள்ளார். குழந்தைகளுக்கு எதிராக நடத்தப்படும் வன்கொடுமைகளை கண்டித்து கன்னியாகுமரி முதல் டெல்லி வரை தேசிய அளவிலான யாத்திரையை முன்எடுத்து வருகிறார்.

 Nobel laurette Kailash Satyarthi met Stalin today at his residence

சென்னையில் இன்று நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்தார், தனுஷ், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்ற பேரணியில் கைலாஷ் சத்யார்த்தியும் கலந்து கொண்டார். 1990களில் இருந்து சிறுவர்களை தொழிலாளர்களாக நியமிப்பதை எதிராகப் போராடி வருகிறார் கைலாஷ் சத்யார்த்தி. இவரது இளமையைக் காப்பாற்று இயக்கம் 80,000ற்கு மேற்பட்ட சிறுவர்களை பல்வேறு வகை சேவைப்பணிகளிலிருந்து தடுத்து அவர்களது மீள்வாழ்வு, மீளிணைப்பு மற்றும் கல்விக்கு வழிவகுத்துள்ளது.

இந்நிலையில் இன்று மாலையில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் கைலாஷ் சத்யார்த்தி சந்தித்தார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Nobel laurette Kailash satyarthi met DMK working president M.K.Stalin at his ALwarpet residence.
Please Wait while comments are loading...