For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வடகிழக்குப் பருவமழை: சென்னை, நெல்லையில் அதிகம் - கோவையில் குறைவு - வெதர்மேன்

அக்டோபர் இறுதியில் தொடங்கிய வடகிழக்குப் பருவமழை டிசம்பர் இறுதியுடன் முடிவுக்கு வருகிறது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: வட கிழக்கு பருவமழை, இந்த மாதத்துடன் முடிவுக்கு வர உள்ளது. வடகிழக்கில் இருந்து வீசும் காற்றில் ஈரப்பதம் குறைவாக உள்ளதால் குறிப்பிடும்படி மழை இல்லை பனிமூட்டம் மட்டுமே நிலவுகிறது. சென்னையில் மேக மூட்டமாக காணப்படுகிறது.

கடந்த அக்டோபர் இறுதியில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. நவம்பர் மாதம் சென்னை, காஞ்சிபுரம் திருவள்ளூரில் கொட்டித்தீர்த்தது. நவம்பர் இறுதியில் ஓகி புயலாக மாறி குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தை சூறையாடியது.

கடந்த சில நாட்களாக மழை பொழிவு குறைவாகவே காணப்படுகிறது. வடகிழக்குப் பருவமழை வருகிற டிசம்பர் 31ம் தேதியுடன் நிறைவடைகிறது.

பருமழை முடிவு

இந்த ஆண்டுக்கான வானிலை நிலவரம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த ஆண்டு இனி மழைப்பொழிவு கிடையாது. ஆனால், கீழைக்காற்று வருகிற ஜனவரி மாதம் வரையில் தொடரும் நிலை உள்ளது. வருகிற டிசம்பர் 31ஆம் தேதி வரையில் மட்டுமே வடகிழக்குப் பருவமழைக் காலம் நீடிக்கும்.

லேசான மழை

லேசான மழை

இந்த ஆண்டு பருவமழை போதுமானதாக இருந்தது. இதனால் சென்னையில் வருகிற 2018ஆம் ஆண்டு தண்ணீர் பிரச்னை இருக்காது. கீழைக்காற்று அடுத்த ஒரு மாதம் வரையில் தொடர்வதால் லேசான மழைக்கு வாய்ப்புகள் உண்டு.

வடகிழக்குப் பருவமழை தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் அதிகளவு பெய்துள்ளது. அதிகபட்சமாக திருநெல்வேலியில் 48 சதவிகித மழைப்பொழிவு காணப்பட்டது. குறைந்தபட்சமாக திருவண்ணாமலையில் 20 சதவிகித மழைப்பொழிவு காணப்பட்டது.

பாபநாசத்தில் 45 செமீ மழை

பாபநாசத்தில் 45 செமீ மழை

நவம்பர் 28 முதல் டிசம்பர் 2வரை ஓகி புயலால் பெய்த மழை தென்மாவட்டங்களில் அணைகளை நிறைத்துள்ளது.
தேனி, விருதுநகர் மாவட்டத்திலும் மழை பெய்துள்ளது. அதிகபட்ச மழை அளவாக பாபநாசத்தில் 45 செமீ மழை பெய்துள்ளது.

முடிந்த மழை

முடிந்த மழை

இதனால் தாமிரபரணியில் வெள்ளம் கரைபுரண்டது. அணை 100 அடிக்கு மேலாக தண்ணீர் நிரம்பியது. அடுத்ததாக டிசம்பர் 5ஆம் தேதியன்று மேலும் காற்றழுத்த தாழ்வு நிலை உருவான பின்னரும் மழை அதிக அளவில் பொழியவில்லை.

மழை குறைவு

மழை குறைவு

புதுக்கோட்டை 47 சதவிகிதம் குறைவாக பெய்துள்ளது. ராமநாதபுரத்தில் 46%, கோவையில் 43% திருச்சியில் 41% ஈரோடு 36% சிவகங்கையில் 36% அளவிற்கு மழை குறைவாக பெய்துள்ளது.

அதிக அளவில் மழை

அதிக அளவில் மழை

வடகிழக்கு பருவமழை காலத்தில் திருநெல்வேலி 48% நாகப்பட்டினம் 27% கன்னியாகுமரியில் 25% சென்னையில் 23% திருவண்ணாமலையில் 20% காரைக்காலில் 20% அளவிற்கு அதிகமாக மழை பெய்துள்ளது.

வடகிழக்குப் பருவமழை முடிவு

வடகிழக்குப் பருவமழை முடிவு

நவம்பரில் தொடங்கிய வடகிழக்குப் பருவமழை டிசம்பர் இறுதியில் முடிவுக்கு வர உள்ளது. இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வானிலை ஆய்வு மையம் அறிவிக்கும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.
நாகை மாவட்டத்திலும், திருவாரூர் மாவட்டத்திலும் வடகிழக்குப் பருவமழை காலத்தில் நல்ல மழை பெய்துள்ளது.

English summary
TamilNadu Weatherman post his face book page, Though technically the easterlies are expected to prevail into January and official announcement of withdrawal of north east monsoon will happen later in January.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X