For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

5 நாட்கள் ரெய்டு.. தெனாவெட்டாக ஐடி அதிகாரிகளை தெறிக்கவிட்ட விவேக்- பரபர தகவல்கள்

தமது வீட்டில் நடந்த 5 நாட்கள் ரெய்டையும் ரொம்பவும் தெனாவெட்டாகத்தான் விவேக் எதிர்கொண்டாராம்.

Google Oneindia Tamil News

Recommended Video

    செய்தியாளர்களை மழையிலேயே நிற்க வைத்து பேட்டி கொடுத்த விவேக்!- வீடியோ

    சென்னை: வருமான வரித்துறையின் 5 நாட்கள் ரெய்டையும் ரொம்பவும் தெனாவெட்டாகத்தான் விவேக் எதிர்கொண்டதாக அவரது வட்டாரங்கள் கூறுகின்றன.

    190 இடங்களில் 2,000 அதிகாரிகள் வருமான வரி சோதனை நடத்திய போதும் இந்த நடவடிக்கையின் பிரதான இலக்காக இருந்தது விவேக்தான். சென்னை மகாலிங்கபுரம் விவேக் வீட்டில்தான் 5 நாட்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் முகாமிட்டு சோதனை நடத்தினர்.

    இச்சோதனையில் முதல் 3 நாட்கள்தான் முழுமையான சோதனை நடைபெற்றது. கடைசி 2 நாட்களும் விவேக்குக்கு உளவியல் ரீதியான தொந்தரவைத்தான் அதிகாரிகள் தந்தார்களாம்.

    அதிகாரிகள் பகீரத முயற்சி

    அதிகாரிகள் பகீரத முயற்சி

    வருமான வரித்துறை அதிகாரிகளைப் பொறுத்தவரையில் அரசியல் ரீதியான சில வாக்குறுதிகளை விவேக்கிடம் பெற முயற்சித்திருக்கிறார். ஆனால் அசராதோ விவேக்கோ, நான் 7-வது படிக்கும் போதே கார்டனில் ரெய்டு வந்தார்கள்..அப்போது சோபாவில் தூங்கி கொண்டிருப்பேன்.. நீங்கள்தான் எழுப்பிவிட்டு செல்வீர்கள் என கெத்தாக சொல்லியிருக்கிறார்.

    ரசீது காட்டிய விவேக்

    ரசீது காட்டிய விவேக்

    அதேபோல் வீட்டில் இருந்த நகைகள் குறித்து அதிகாரிகள் துருவி துருவி கேட்டிருக்கின்றனர். அதற்கு இதெல்லாம் கல்யாணத்துக்கு மாமனார் வீட்டில் போட்ட நகைகள் சார்... நகை வாங்குனத்துக்கு ரசீதுகள் இதுதான் சார்.. என கூறியிருக்கிறார்.

    வாட்ஸ் அப்பில் ஆவணங்கள்

    வாட்ஸ் அப்பில் ஆவணங்கள்

    ஜெயா டிவியில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அங்கிருந்து வாட்ஸ் அப்பில் மகாலிங்கம் வீட்டில் இருந்த அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து சரிபார்த்திருக்கின்றனர். இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டே கேலியும் கிண்டலுமாக விவேக் ரெய்டை எதிர்கொண்டார் என்கின்றனர்.

    பதுக்கலில் எக்ஸ்பர்ட்

    பதுக்கலில் எக்ஸ்பர்ட்

    ஆனால் ஜாஸ் சினிமாஸ் விவகாரத்தில் வசமாக விவேக் சிக்கி இருப்பதாகவே கூறப்படுகிறது. மேலும் யாரும் எதிர்பார்க்காத சில வீடுகளில் முக்கிய ஆவணங்களை விவேக் பதுக்கி வைத்திருந்தது மன்னார்குடி உறவுகளுக்கே ஷாக்காக இருந்ததாம்.

    English summary
    Ilavarasi Son Vivek said "I am very clear about that our duty to do pay tax. Not to make the searches a big issue."
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X