For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பறவை காய்ச்சல் தமிழகத்தில் பரவ வாய்ப்பில்லை: கால்நடை துறை கூடுதல் கூடுதல் இயக்குனர் தகவல்

தமிழகத்தில் பறவை காய்ச்சல் நோய் பரவ வாய்ப்பில்லை என கால்நடை துறை கூடுதல் கூடுதல் இயக்குனர் சக்திவேல் கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

நெல்லை: தமிழகத்தில் பறவை காய்ச்சல் நோய் பரவாமல் தடுக்க ஆறு மாவட்டங்களில் 26-சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கால்நடைத்துறை கூடுதல் இயக்குனர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியில் கடந்த சில தினங்களாக பறவை காய்ச்சலால் அதிக வாத்துக்கள் உயிரிழந்தன. இதனைத் தொடர்ந்து பறவை காய்ச்சல் நோய், தமிழகத்தில் பரவாமல் தடுக்க, கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி தடுப்பு முகாம் அமைக்கப்பட்டு தீவீர சோதனைகளை நடத்தி வாகனங்களுக்கு கிருமி நாசினி தொளித்து அனுமதிக்கப்பட்டு வருகிறது.

not Possible to spread of bird flu in tamilnadu

இந்த நிலையில் தமிழக கேரள எல்லையான புலியறை சோதனைச்சாவடியில் கால்நடைத்துறை கூடுதல் இயக்குனர் சக்திவேல் ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், கேரளாவில் இருந்து தமிழகம் வரும் சரக்கு வாகனங்கள் தீவீரமாக கண்காணிக்கப்பாட்டு கிருமி நாசினிகள் தெழிக்கப்பட்டு தமிழகத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பறவை காய்ச்சல் நோய் பரவாமல் தடுக்க ஆறு மாவட்டங்களில் 26-சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழகத்தில் பறவை காய்ச்சல் பரவ வாய்ப்பில்லை அதற்க்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

English summary
not Possible to spread of bird flu in tamilnadu, Veterinary Additional Director sakthivel says that
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X