For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

5.67 லட்சம் வாக்குகளைப் பெற்று முக்கிய கட்சிகளுக்கு ”ஆப்பு” அடித்த “நோட்டா”

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் நடந்த முடிந்த லோக்சபா தேர்தலில் அதிமுக 37 இடங்களில் வெற்றிக் கொடியை நாட்டியுள்ளது.

ஆனால், அதிமுகவை விட மற்ற முக்கிய கட்சிகளுக்கு பெரும் போட்டியாக இருந்த ஒன்று "நோட்டா" தான்.

தமிழகத்தில், அனைத்து தொகுதிகளிலும், 'நோட்டா'விற்கு அதிக ஓட்டுகள் பதிவாகி உள்ளது. 49 ‘ஓ' என்றாலே என்னவென்று போன தேர்தல்களில் தெரியாமல் இருந்த மக்கள் இந்த முறை "நோட்டா" பட்டனுக்கு கும்மாங்குத்து குத்தியுள்ளனர்.

NOTA get 5.67 lakh votes in this LS election…

தமிழகத்தில் முதன் முறையாக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் யாருக்கும் ஓட்டுப்போட விரும்பாதவர்கள் "ஓட்டளிக்க விரும்பவில்லை" என்பதை தெரிவிப்பதற்காக, இயந்திரத்தின் கடைசி பட்டன் நோட்டா பட்டனாக அறிவிக்கப்பட்டது.

இதைத்தான் எதிர்பார்த்தோம் என்று அனைத்து தொகுதிகளிலும் ஏராளமானோர் நோட்டா பட்டனை அழுத்தி உள்ளனர். அதிகபட்சமாக நீலகிரி(தனி) தொகுதியில் 46 ஆயிரம் பேர் நோட்டாவிற்கு ஓட்டு போட்டுள்ளனர்.

மொத்த நோட்டா ஓட்டுகள் விவரம்:

திருவள்ளூர் - 23,598;
வட சென்னை - 13,987;
தென் சென்னை - 20,229;
மத்திய சென்னை - 21,933;
ஸ்ரீபெரும்புதுார் - 27,676;
காஞ்சிபுரம் - 17,736;
அரக்கோணம் - 10,370;
வேலுார் - 7,100;
கிருஷ்ணகிரி - 13,250;
தர்மபுரி - 12,385;
திருவண்ணாமலை - 9,595;
ஆரணி - 9,304;
விழுப்புரம் - 11,440;
சேலம் - 20,336;
நாமக்கல் - 16,002;
ஈரோடு - 16,204;
கள்ளக்குறிச்சி - 10,901;
திருப்பூர் - 13,941;
நீலகிரி - 46,559;
கோவை - 17,428; .
பொள்ளாச்சி - 12,908;
திண்டுக்கல் - 10,591;
கரூர் - 13,763;
திருச்சி - 22,848;
பெரம்பலுார் - 11,605;
கடலுார் - 10,338;
சிதம்பரம் - 12,138;
மயிலாடுதுறை - 12,932;
நாகப்பட்டினம் - 15,662;
தஞ்சாவூர் - 12,218;
சிவகங்கை - 6,702;
மதுரை - 14,963;
தேனி - 10,312;
விருதுநகர் - 12,225;
ராமநாதபுரம் - 6,279;
துாத்துக்குடி - 11,447;
தென்காசி - 14,492;
திருநெல்வேலி - 12,893;
கன்னியாகுமரி - 4,150.

மொத்தத்தில், முக்கிய கட்சிகளின் தோல்விக்கு "நோட்டா" தான் முக்கிய காரணமாக இருந்துள்ளது.இது ஒரு ஆரம்பம்தான்.ஆட்சியை பிடித்துள்ளவர்கள் கடமையில் இருந்து தவறினால் அடுத்தமுறை மொத்தமாக "நோட்டா"தான் என்பதை உணர்ந்து இப்பொழுதே விழித்துக் கொள்ள வேண்டிய தருணம் இது என்பதைதான் இந்த சதவீதம் உணர்த்துகின்றது.

English summary
NOTA got totally 5 lakhs 67 votes in this LS election 2014.This is the beginning intimation for all the parties from democratic people's strength.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X