For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"நோட்டாவை ஜெயிக்க முடியாத கட்சியின் கடைசி புலம்பல்தான் இது"

By BBC News தமிழ்
|

தேர்தலில், நோட்டா தேவையில்லை என்பது தமிழக பாஜக தலைவர் தமிழிசையின் கருத்து. தமிழிசை கூறுவது போல் நோட்டா தேவையற்ற இடையூறா? தேர்தலில் தோற்கும்போது மட்டும் நோட்டா மீது அரசியல் கட்சிகள் பழிபோடுகின்றனவா? என நேற்றைய வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.

அதற்கு வாசகர்கள் பிபிசி தமிழின் சமூக வலைத்தளப் பக்கங்களில் அளித்த கருத்துகளை இங்கே தொகுத்தளிக்கிறோம்

''தங்கள் கட்சியைவிட நோட்டா அதிக வாக்கு பெற்றுவிட்டதினால் கோபத்தில் பேசுகிறார் ஒட்டு போடுவது ஒவ்வொரு இந்திய குடிமகன்களின் கடமை அப்படியிருக்க யாருக்கும் வாக்கு அளிக்க விரும்பவில்லை என்ற எண்ணம் தோன்றும்பொழுது யாருக்கும் வாக்கு அளிக்காமல் செல்வதை விட நோட்டா விற்கு வாக்களிப்பது நல்லதே'' என்கிறார் கே.என்.டி விஜய்.

https://twitter.com/kntvijay/status/945923644877713408

''தன் கட்சி வாக்குகளை விட அதிகமாக வாக்களிக்க விரும்பாதவர்கள் அதிகம் நோட்டாவை நாடுவதாலேயே நோட்டாவை எதிர்க்கின்றனர் அரசியல் தலைவர்கள்'' என எழுதியிருக்கிறார் ரியாஸ்.

https://twitter.com/kntvijay/status/945923644877713408

வாதம் விவாதம்
BBC
வாதம் விவாதம்

வெற்றி பெற்ற நோட்டா வை பாா்த்தல் தோல்வி அடைந்த தாமரைக்கு வலி இருக்கதா? என முகநூலில் தெரிவித்துள்ளார் மணிவண்ணன்.

''நோட்டாவை ஜெயிக்க முடியாத கட்சியின் கடைசி புலம்பல் தான் இது'' என்கிறார் கருப்பழகன்.

https://twitter.com/babufireguy/status/945980201606922240

''நோட்டா இல்லையென்றால் அந்த ஓட்டு முழுவதும் செல்லாத ஓட்டாக மாறும். அதற்கு இது தேவலாம். யார் மீதும் விருப்பமில்லை என்பதின் வெளிப்பாடுதான் இந்த நோட்டா'' என்கிறார் செந்தில் ராபர்ட்.

''அரசியல்வாதிகளின் அடாவடிகளை பிடிக்காதவர்கள்தான் நோட்டாவிற்கு வாக்களிக்கிறார்கள்'' என தெரிவித்திருக்கிறார் உமாபதி பெரியசாமி.

https://twitter.com/SenthilRoberts/status/945947561298345985

''தமிழிசை அவர்கள் "திறமையான வேட்பாளர்கள் இருக்கும்பொழுது நோட்டவுக்கு ஏன் வாக்களிக்கின்றனர் ?"எனக் கேட்கின்றார்.,உண்மையில் திறமையான வேட்பாளராக யாரும் இல்லாததால்தான் மக்கள் நோட்டாவுக்கு வாக்களிக்கின்றனர்'' என்கிறார் அஜித் என்ற வாசகர்.

https://twitter.com/Ajith_Adhi_Dev/status/945922375844954113

''அரசியல் புரிதல் இல்லாதவர்களுக்கான ஜோக்கர் தான் நோட்டா! அதிகாரத்தை தேர்ந்தெடுப்பதற்குத்தானே வாக்குரிமை ? பின்பு எதற்கு நோட்டா ?. நான் ஓட்டளிக்காமல் இருந்தாலே எனக்கு களத்தில் நிற்கும் வேட்பாளர் யாரும் பிடிக்கவில்லை என்றுதானே அர்த்தம் பின்பு ஏன் நான் இரண்டாயிரம் ரூபாய் செலவழித்து ஊருக்கு சென்று நோட்டாவில் வாக்களிக்க வேண்டும் ?''' என முகநூலில் எழுதியுள்ளார் எம்.வேலு என்ற வாசகர்.

''அது ஒண்ணுமில்லீங்க, அந்த notaவ தூக்கிட்டா இனிமே யாரும் "notaகிட்ட தோத்த கட்சி"ன்னு சொல்ல மாட்டங்கள்ல அதுக்குத்தான் ட்ரை பன்றாங்க'' எனக் கிண்டலாக எழுதியுள்ளார் சத்யா.

https://twitter.com/comradesathya/status/946057726391599104

''இது முற்றிலும் ஜனநாயகத்துக்கு எதிரான செயல் தேர்தலில் தோற்றதனால் வந்த வேதனையின் வெளிப்பாடு ஓட்டு போன எப்படி ஒருவருக்கு உரிமை உள்ளதோ அதே போல் எந்த நபருக்கு எனக்கு விருப்பமில்லை என்று கூறவும் தேர்தலில் இடம் உள்ளம் NOTA நிச்சயம் தேவை என பதிவிட்டுள்ளார்'' பால குமாரன் எனும் வாசகர்.

பிற செய்திகள்:

BBC Tamil
English summary
தேர்தலில், நோட்டா தேவையில்லை என்பது தமிழக பாஜக தலைவர் தமிழிசையின் கருத்து. தமிழிசை கூறுவது போல் நோட்டா தேவையற்ற இடையூறா? தேர்தலில் தோற்கும்போது மட்டும் நோட்டா மீது அரசியல் கட்சிகள் பழிபோடுகின்றனவா? என நேற்றைய வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X