For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"ஸ்டிக்கர்" ஓ.கே.. விருப்ப மனுவிலும் "அம்மாவுக்காக" ரப்பர் ஸ்டாம்ப் அடிச்சது ஓவரா இருக்கே!

Google Oneindia Tamil News

சென்னை: அம்மா ஸ்டிக்கரை வைத்து இன்று வரை பலரும் டிவிட்டரிலும், பேஸ்புக்கிலும் அசராமல் ஓட்டிக் கொண்டுதான் உள்ளனர். இந்த நிலையில் அம்மா ரப்பர் ஸ்டாம்ப்பை அதிமுகவினர் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்களை வாரி வழங்கி வருகின்றனர் அதிமுகவினர். வழக்கம் போல தங்களை விட தங்களது தலைவிக்காக சீட் கேட்டு விருப்ப மனு கொடுப்பதுதான் அதிகமாக இருக்கிறது.

அப்படியே தங்களுக்கும் சேர்த்து சீட் கேட்டு விண்ணப்ப மனுக்களைக் கொடுத்து வருகின்றனர் அதிமுகவினர்.

ஸ்டாலினின் முன்னாள் தொகுதிக்கு வரவேற்பு

ஸ்டாலினின் முன்னாள் தொகுதிக்கு வரவேற்பு

மு.க.ஸ்டாலின் முன்பு வெற்றி பெற்ற தொகுதி ஆயிரம் விளக்கு. அந்தத் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட பலரும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

ஆர்.கே.நகருக்கும் வரவேற்பு

ஆர்.கே.நகருக்கும் வரவேற்பு

அதேபோல தற்போது அவர் உறுப்பினராக உள்ள ஆர்.கே.நகரில் மீண்டும் போட்டியிடக் கோரி பலரும் விருப்ப மனு தாக்கல் செய்கின்றனர்.

சீட் கேட்ட செம்மலை

சீட் கேட்ட செம்மலை

முன்னாள் அமைச்சர் செம்மலையும், ஜெயலலிதாவுக்காக சீட் கேட்டு நேற்று விருப்ப மனு தாக்கல் செய்தார். இதேபோல பல்வேறு பிரமுகர்களும் ஜெயலலிதாவுக்காக விருப்ப மனு கொடுத்து வருகின்றனர்.

ரப்பர் ஸ்டாம்ப்பே செஞ்சுட்டீங்களா!

ரப்பர் ஸ்டாம்ப்பே செஞ்சுட்டீங்களா!

இதில் காமெடி என்னவென்றால் ஜெயலலிதாவுக்காக தாக்கல் செய்யும் மனுக்களில் மாண்புமிகு அம்மாவுக்காக என்று கூறி ரப்பர் ஸ்டாம்ப்பில் முத்திரை குத்தி கொடுக்கின்றனராம்.

அவங்களே அடிச்சிட்டாங்க போல

அவங்களே அடிச்சிட்டாங்க போல

இதை விருப்ப மனுக்களை விநியோகிப்போரே விண்ணப்பத்தில் ரப்பர் ஸ்டாம்ப்பால் குத்திக் கொடுக்கின்றனராம். அதாவது கட்சியே இந்த ரப்பர் ஸ்டாம்ப்பை தயார் செய்து கொடுத்திருக்கிறது போல.

ஒருவேளை "நமக்கு நாமே" என்பதை அதிமுகவினர் தப்பா புரிஞ்சுக்கிட்டாங்க போல!

English summary
After amma sticker now ADMK has introduced "Amma Rubberstamp" it seems.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X