For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"திமுக, அதிமுக" கதையாக மாறிப் போன அமெரிக்க அதிபர் பதவி!

தமிழகத்தில் திமுக, அதிமுக மாறி மாறி ஆட்சியைப் பிடிப்பது போல அமெரிக்காவில் குடியரசுக் கட்சியும், ஜனநாயகக் கட்சியும் மாறி மாறி அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று வருகின்றன.

Google Oneindia Tamil News

சென்னை: அமெரிக்க அதிபர் பதவி, தமிழக முதல்வர் பதவி போல மாறி விட்டது. திமுக, அதிமுக இங்கு மாறி மாறி வருவதைப் போல அங்கும் கடந்த 1988ம் ஆண்டிலிருந்து குடியரசுக் கட்சியும், ஜனநாயகக் கட்சியும் மாறி மாறி அதிபர் பதவியை வென்று வருகின்றன.

அமெரிக்காவின் 45வது அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வரலாறு காணாத கடும் போட்டியில் அவர் ஹிலரி கிளிண்டன வீழ்த்தியுள்ளார். இந்த நேரத்தில் ஒரு குட்டி சுவாரஸ்ய தகவல்.

தமிழகத்தில் எப்படி திமுகவும், அதிமுகவும் மாறி மாறி வெற்றி பெறுகின்றனவோ அதே போலத்தான் கடந்த 1988ம் ஆண்டிலிருந்து குடியரசுக் கட்சியும், ஜனநாயகக் கட்சியும் அங்கு மாறி மாறி ஆட்சியைப் பிடித்து வருகின்றன.

ஜார்ஜ் புஷ் சீனியர்

ஜார்ஜ் புஷ் சீனியர்

1988ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜார்ஜ் புஷ் சீனியர் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்.

பில் கிளிண்டன்

பில் கிளிண்டன்

1992ல் நடந்த தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் பில் கிளிண்டன் வெற்றி பெற்றார். பின்னர் 1996ல் மீண்டும் பதவியில் நீடித்தார் பில்.

ஜார்ஜ் புஷ் ஜூனியர்

ஜார்ஜ் புஷ் ஜூனியர்

2000மாவது ஆண்டு நடந்த தேர்தலில் குடியரசுக் கட்சியின் ஜார்ஜ் புஷ் ஜூனியர் வெற்றி பெற்றார். இவர் 2004ல் மீண்டும் பதவி நீட்டிப்பு பெற்றார்.

பராக் ஒபாமா

பராக் ஒபாமா

2008ல் நடந்த தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் பராக் ஒபாமா வெற்றி பெற்றார். 2012ல் மீண்டும் பதவி நீட்டிப்பு பெற்றார்.

டிரம்ப்

டிரம்ப்

தற்போது நடந்துள்ள தேர்தலில் குடியரசுக் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. அபாயகரமானவராக கருதப்படும் டிரம்ப் அதிபராகியுள்ளார்.

English summary
It is like DMK and ADMK capturing the power in Tamil Nadu, when compared with the US polls. Both Republicans and Democrats are winning the Presidential polls alternatively since 1988.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X