For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"மக்கள் இயக்கம்".. இப்பத்தான் கண்ணில் தெரியுது இந்த வட இந்திய மீடியாக்களுக்கு!

ஜல்லிக்கட்டு கோரி தமிழகத்தில் நடந்து வரும் எழுச்சிப் போராட்டத்தை இப்போதுதான் வட இந்திய மீடியாக்கள் சற்று முக்கியத்துவம் கொடுத்துக் காட்டிக்கொண்டுள்ளன. மக்கள் இயக்கம் என கூறி வருகின்றன.

Google Oneindia Tamil News

சென்னை: டெல்லிக்கு "அங்கிட்டு" என்ன நடந்தாலும் கண்டுக்கவே மாட்டாங்க இந்த வட இந்திய மீடியா. இது நாள் வரை இந்த குற்றச்சாட்டை துடைத்துப் போட ஆங்கில, இந்தி சேனல்கள் முயற்சித்ததே இல்லை. காரணம், அப்படி ஒரு அலட்சியம் தமிழகம் என்றால், தென்னிந்தியா என்றால். இன்று தனது பாரம்பரியத்தைக் காக்க தெருவில் இறங்கிப் போராடும் தமிழக இளைஞர்களின் எழுச்சி மிகுந்த வீரப் போராட்டத்தைப் பார்த்து வட இந்திய மீடியாக்களே உறைந்து போயுள்ளன.

ஆரம்பத்தில் இந்தப் போராட்டத்தைக் கண்டு கொள்ளாமல் ஓரம் கட்டிய வட இந்திய மீடியாக்கள் சர்வதேச அளவில் இந்த போராட்டம் மிகப் பெரிய புரட்சியாக பார்க்கப்பட்டதை உணர்ந்து அவசரம் அவசரமாக செய்திகளை கவர் செய்ய ஆரம்பித்தன.

Now, North Indian media say TN protest as People's Movement

அதை விட முக்கியமாக, வட இந்திய மீடியாக்களை சமூக வலைதளங்களில் மக்கள் வெளுத்து வாங்கி கிழித்துத் தோரணம் கட்டித் தொங்க விட்டதால் எங்கே தங்களது பாரபட்சத போக்கு உலக அளவில் அம்பலமாகி அசிங்கப்பட்டு விடுவோமா என்ற அச்சம்தான் வட இந்திய மீடியாக்களுக்கு அதிகம் இருந்தது. இந்தப் பயத்தில்தான் வேறு வழியில்லாமல் தமிழகத்தின் எழுச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தனர்.

Now, North Indian media say TN protest as People's Movement

நாளுக்கு நாள் இந்த போராட்டம் வீறு கொண்டு போனதை யாருமே எதிர்பார்க்கவில்லை. தமிழ் மக்கள் இப்படி திருப்பி அடிப்பார்கள் என்பதை யாருமே எதிர்பார்க்கவில்லை. இது தானாக வந்த உணர்ச்சிப் போராட்டம் என்பதை உணரவே வட இந்திய மீடியாக்களுக்கு இத்தனை காலம் பிடித்தது என்பது ஒரு தேசியத் துயரமாகும்.

டைம்ஸ் நவ் டிவி இந்தப் போராட்டத்தை தமிழ் மக்கள் இயக்கம் என்று கூறுகிறது. இன்னொரு டிவி தமிழ்ப் பெருமை என்று ஹேஷ்டேக் போட்டு செய்தி போடுகிறது. கிட்டத்தட்ட அத்தனை வட இந்திய டிவி சேனல்களும் ஜல்லிக்கட்டு எழுச்சிப் போராட்டத்தை முக்கியத்துவம் வாய்ந்த செய்தியாக மாற்றியுள்ளன. என்டிடிவி போன்ற சில சானல்களைத் தவிர.

Now, North Indian media say TN protest as People's Movement

இந்த மாற்றம் உண்மையானதாக இருக்க வேண்டும். இந்தியாவின் எந்த மூலையில் எது நடந்தாலும் முக்கியத்துவம் தர வேண்டும். ஆள் பார்த்து, ஊர் பார்த்து செய்தி போடும் கேவலத்தை நிறுத்த வேண்டும்.. அப்போதுதான் மீடியா என்ற சொல்லுக்கு அர்த்தம் இருக்க முடியும்.

Now, North Indian media say TN protest as People's Movement

பி.கு: இதுகுறித்து சமூக வலைதளத்தில நாம் பார்த்த கிண்டல் இது: வட இந்திய மீடியாக்களுக்கு அங்கு செய்திகள் இல்லை போலும், அதான் இந்த ஊர் பக்கம் திரும்பியுள்ளனர்!

English summary
North Indian media never ever showed any South Indian protests, particularly Tamil Nadu protests in a big way. But now, they say TN protest for Jallikattu as People's Movement.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X