For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காவிரி பிரச்னையை தீர்க்க வேண்டியது மத்திய அரசின் கடமை... ஓ.பன்னீர்செல்வம் காட்டம்!

உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி தமிழகத்துக்கு சேர வேண்டிய காவிரி நீரை பெற்றத் தர வேண்டியது மத்திய அரசின் கடமை என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    காவிரி விவகாரத்தில் சட்டத்தை ஏற்காத கர்நாடகா- வீடியோ

    தஞ்சாவூர் : உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி தமிழகத்துக்கு சேர வேண்டிய காவிரி நீரை பெற்றத் தர வேண்டியது மத்திய அரசின் கடமை என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இரு மாநில உறவு சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் பாதிஇந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டிய முழு பொறுப்பு மத்திய அரசுக்கு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

    தஞ்சாவூரில் அதிமுக பிரமுகர் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது : முதல்வர் பழனிசாமி கர்நாடக முதல்வருக்கு கடிதம் எழுதி சந்திக்க வருகிறேன் என்று நேரம் கேட்டிருந்தார். அப்படி கேட்டிருந்தும் முறையான பதில் வந்து சேரவில்லை.

    காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி தமிழகத்திற்கு 192 டிஎம்சி நீரை கர்நாடகாவின் 4 அணைகளில் இருந்து ஓராண்டுக்கு விடுவிக்கப்பட வேண்டும். இந்த ஆண்டின் பாக்கி நமக்கு தர வேண்டியது இன்று வரை கிட்டதட்ட 74 டிஎம்சி நீரை தர வேண்டியுள்ளது.

    அதிக பாதிப்பு இருக்கும்

    அதிக பாதிப்பு இருக்கும்

    காவிரி டெல்டா பகுதியில் நடப்பட்டிருக்கின்ற சம்பா பயிர்களை காப்பாற்ற 7 முதல் 10 டிஎம்சி வரை தண்ணீர் அவசியம் தேவைப்படுகிறது. இல்லாவிட்டால் பயிர்களை காப்பாற்ற முடியாது பாதிப்பு அதிகம் இருக்கும் என்பதால் தான் கர்நாடக முதல்வரிடம் இது குறித்து பேச நேரம் கேட்கப்பட்டது.

    மறுக்கும் கர்நாடகா

    மறுக்கும் கர்நாடகா

    ஆனால் சித்தராமையாவோ தமிழக முதல்வரை சந்திக்க நேரம் கொடுக்கவில்லை. காவிரி நீர் பிரச்னையை தீர்ப்பதற்காகத் தான் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு 17 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்றது.

    தீர விசாரித்தே இறுதித் தீர்ப்பு

    தீர விசாரித்தே இறுதித் தீர்ப்பு

    17 ஆண்டு விசாரணைக்குப் பின்னரே இறுதித்தீர்ப்பு வழங்கப்பட்டது. ஒரு மாநிலத்திற்கு பிரச்னை என்று உச்சநீதிமன்றம் சென்றால் நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பை நிறைவேற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் அந்த மாநிலத்திற்கு உள்ளது.

    நியாயம் கிடைக்கவில்லை

    நியாயம் கிடைக்கவில்லை

    இரண்டு மாநிலங்களுக்கு பிரச்னை என்று உச்சநீதிமன்றம் சென்றால் அந்த பிரச்னையை தீர்க்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு இருக்கிறது. மத்திய அரசின் கடமையாக இருக்கின்ற காவிரி விஷயத்தில் இது வரை நமக்கு நியாயமான தண்ணீர் கிடைக்கவில்லை என்பது தான் இன்றைய நிலை. இதனால் மீண்டும் உச்சநீதிமன்றம் சென்றிருக்கிறோம் என்றார்.

    English summary
    Its the duty of centre to solve the Cauvery water issue between Karnataka and Tamilnadu as it is the issue between 2 states and take necessary steps to implement SC order.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X